Asianet News TamilAsianet News Tamil

2018ல் வெளியான 182 படங்களில் எத்தனை படங்களை பாத்துருக்கீங்க...இந்த லிஸ்டைக் கொஞ்சம் செக் பண்ணுங்க...

தமிழ் சினிமாவின் முதல் படம் வெளியான 1930ம் ஆண்டிலிருந்து, நேற்று விடைபெற்ற டிசம்பர் 31 வரை இதுவரை 7147 படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இதில் கடந்த ஆண்டு ரிலீஸான படங்களின் எண்ணிக்கை மட்டும் 182.

release list of the movies in 2018
Author
Chennai, First Published Jan 1, 2019, 1:10 PM IST

தமிழ் சினிமாவின் முதல் படம் வெளியான 1930ம் ஆண்டிலிருந்து, நேற்று விடைபெற்ற டிசம்பர் 31 வரை இதுவரை 7147 படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இதில் கடந்த ஆண்டு ரிலீஸான படங்களின் எண்ணிக்கை மட்டும் 182.

இவற்றில் சில சின்ன பட்ஜெட் படங்கள் 10-க்கும் குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகி வந்த சுவடே தெரியாமல் போனதால், படத்தின் தலைப்புகளை இங்கே படிக்கும்போது ரசிகர்களுக்கு புத்தம் புதிதாக தோன்றலாம்.

‘நடிகையர் திலகம்’, திரைப்படம் தெலுங்கு டப்பிங் படம் என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படம் கன்னட டப்பிங் படம் என்பதால் அதுவும் சேர்க்கப்படவில்லை.

‘பிரபா’ என்ற திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டே வெளியாகி இந்தாண்டு திரும்பவும் ‘ரீ ரிலீஸ்’ என்கிற முறையில் திரைக்குக் கொண்டு வரப்பட்டதால், அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.release list of the movies in 2018

படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம் / தயாரிப்பாளர், இயக்குநரின் பெயர் – இந்த வரிசையில்தான் பட்டியல் இடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம்

05-01-2018

சாவி – தி ஸ்பார்க்லேண்ட் – இரா.சுப்ரமணியன்
ஓநாய்கள் ஜாக்கிரதை – எஸ்.பையாஸ்கோப் புரொடெக்சன்ஸ் – ஜே.பி.ஆர்.
டிசம்பர் 13 – முகேஷ் பிலிம்ஸ் – புவனேஷ்
பார்க்கத் தோணுதே – வசவி பிலிம்ஸ் – ஜெய்.செந்தில் குமார்
விதி மதி உல்டா – ஆர்.எம்.டபிள்யூ மீடியா ஒர்க்ஸ் – எஸ்.விஜய் பாலாஜி
காவாளி – எஸ்.கே.சினி மூவிஸ் – எம்.ராஜன்
12-01-2018

ஸ்கெட்ச் – மூவிங் பிரேம், வி கிரியேஷன்ஸ் – விஜய்சந்தர்
தானா சேர்ந்த கூட்டம் – ஸ்டூடியோ கிரீன் – விக்னேஷ் சிவன்
குலேபகாவலி – கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் – கல்யாண்
19-01-2018

வீரத்தேவன் – ஜி.எஸ்.மூவிஸ் – வீரன் செல்வராசு
26-01-2018

மன்னர் வகையறா – ஏ 3 வி சினிமாஸ் – ஜி.பூபதி பாண்டியன்
சரணாலயம் – கோ புரொடெக்சன்ஸ் – இராசு.ஜெகநாதன்
நிமிர் – மூன்ஷாட் எண்ட்டெர்டெயின்மெண்ட் – பிரியதர்ஷன்
பாகமதி – வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் – ஜி.அசோக்
பிப்ரவரி மாதம்release list of the movies in 2018

02-02-2018

மதுரவீரன் – பி.ஜி.மீடியா ஒர்க்ஸ், வி ஸ்டூடியோஸ் – பி.ஜி.முத்தையா
விசிறி – ஜெ.சா. புரொடெக்சன்ஸ் – வெற்றி மகாலிங்கம்
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – 7சி எண்ட்டெர்டெயின்மெண்ட் – பி.ஆறுமுககுமார்
படை வீரன் – எவோக் புரொடெக்சன்ஸ் – தனா
ஏமாலி – லதா புரொடெக்சன்ஸ் – வி.இசட்.துரை
09-02-2018

கலகலப்பு-2 – அவ்னி மூவி மேக்கர்ஸ் – சுந்தர்.சி.
சொல்லிவிடவா – ராம் பிலிம் இண்டர்நேஷனல் – அர்ஜூன்
சவரக்கத்தி – லோன் வோல்ப் புரொடெக்சன்ஸ் – ஜி.ஆர்.ஆதித்யா
நரி வேட்டை – சேனல் ஆகாஷ் ஸ்டூடியோ – ஆகாஷ் சுதாகர்
16-02-2018

வீரா – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ராஜாராமன்
மேல்நாட்டு மருமகன் – உதயா கிரியேஷன்ஸ் – எம்.எஸ்.எஸ்.
நாகேஷ் திரையரங்கம் – டிரான்ஸ் இந்தியா மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட் – இசாக்
மனுசனா நீ – எச்.3 சினிமாஸ் – கஸாலி
நாச்சியார் – பி ஸ்டூடியோஸ் – பாலா
22-02-2018release list of the movies in 2018

கூட்டாளி – எஸ்.பி.பிக்சர்ஸ் – எஸ்.கே.மதி
23-0-2018

கேணி – பிராக்ரண்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ் – எம்.ஏ.நிஷாத்
காத்தாடி – கேலக்ஸி பிக்சர்ஸ் – எஸ்.கல்யாண்
6 அத்தியாயம் – ஆஸ்கி மீடியா ஹட் – 6 இயக்குநர்கள்
ஏண்டா தலையில எண்ண வெக்கல – யோகி அண்ட் பார்ட்னர்ஸ் – விக்னேஷ் கார்த்திக்
மெர்லின் – ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டூடியோஸ் – கீரா
தமிழனானேன் – சதீஷ் ராமகிருஷ்ணன் – சதீஷ் ராமகிருஷ்ணன்
மார்ச் மாதம்

02-03-2018

யாழ் – மைஸ்டிக் பிலிம்ஸ் – எம்.எஸ்.ஆனந்த்
தாராவி – ஏ.ஆர்.எஸ்.இண்டர்நேஷனல் – பவித்ரன்
ஏப்ரல் மாதம்

20-04-2018

மெர்க்குரி – ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் – கார்த்திக் சுப்பராஜ்
முந்தல் – ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் – ஸ்டெண்ட் ஜெயந்த்
27-04-2018

பாடம் – ரோல்லன் மூவிஸ் – இ.ராஜசேகர்
தியா – லைகா புரொடெக்சன்ஸ் – ஏ.எல்.விஜய்
பக்கா – பென் கான்சார்டியம் ஸ்டூடியோஸ் – எஸ்.எஸ்.சூர்யா
மே மாதம்

01-05-2018

சில சமயங்களில் – பிரபுதேவா ஸ்டூடியோஸ், திங்க் பிங் ஸ்டூடியோ – பிரியதர்ஷன்
04-05-2018

அலைபேசி – விஜயலட்சுமி கிரியேஷன்ஸ் – முரளி பாரதி
இருட்டு அறையில் முரட்டுக் குத்து – புளுகோஸ்ட் பிக்சர்ஸ் – சந்தோஷ் பி.ஜெயக்குமார்
காத்திருப்போர் பட்டியல் – லேடி ட்ரீம் சினிமாஸ் – பாலையா டி.ராஜசேகர்
11-05-2018

இரவுக்கு ஆயிரம் கண்கள் – ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி – மு.மாறன்
இரும்புத்திரை – விஷால் பிலிம் பேக்டரி – பி.எஸ்.மித்ரன்
6 முதல் 6 வரை – லட்சுமி எம்.ஜி.ஆர்.மூவிஸ் – எம்.ஜி.ரெட்டி
17-05-2018release list of the movies in 2018

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – ஹர்சினி மூவிஸ் – சித்திக்
18-05-2018

காளி – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – கிருத்திகா உதயநிதி
காதலர்கள் வாலிபர் சங்கம் – விஷ்ணு மூவி மேக்கர்ஸ் – காசி விஸ்வநாதன்
18-05-2009 – எஸ்.எஸ்.கே.கிரியேஷன்ஸ் – குப்பன் கணேசன்
செயல் – சி.ஆர்.கிரியேஷன்ஸ் – ரவி அப்புலு
பால்காரி – ராகுல் வர்மா ஜே.மூவிஸ் – ஓம் புல்லி ஜீவரத்தினம்
25-05-2018

அபியும் அனுவும் – யோட்லீ பிலிம்ஸ் – பி.ஆர்.விஜயலட்சுமி
ஒரு குப்பைக் கதை – பிலிம் பாக்ஸ் புரொடெக்சன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் – காளி ரங்கசாமி
பேய் இருக்கா இல்லையா – டீம் ஒர்க் டாக்கீஸ் – ப.ரஞ்சித்குமார்
புதிய புரூஸ்லீ – திண்டுக்கல் வெங்கடேஷ்வரா பிக்சர்ஸ் – முளையூர் ஏ.சோணை
செம – பசங்க புரொடெக்சன்ஸ், லிங்கா பைரவி கிரியேஷன்ஸ் – வள்ளிகாந்த்
காலக்கூத்து – கள்ளழகர் எண்ட்டெர்டெயின்மெண்ட் – எம்.நாகராஜன்
ஜூன் மாதம்

01-06-2018release list of the movies in 2018

ஆண்டனி – ஆண்டனி புரொடெக்சன்ஸ் – குட்டி குமார்
மோகனா – மோரா பிக்சர்ஸ் – ஆர்.ஏ.ஆனந்த்
பஞ்சு மிட்டாய் – தீபம் சினிமா – எஸ்.பி.மோகன்
வயக்காட்டு மாப்பிள்ளை – ஜீவா மூவி மேக்கர்ஸ் – விமல் முருகன்
எக்ஸ் வீடியோஸ் – கலர் ஷோடோஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சஜோ சுந்தர்
07-06-2018

காலா – வுண்டர்பார் பிலிம்ஸ் – பா.ரஞ்சித்
08-06-2018

சமூகவலைத்தளம் – விக்டரி பிலிம்ஸ் – ஈசன்
14-06-2018

கோலிசோடா-2 – கிளாப் போர்டு புரொடெக்சன்ஸ் – விஜய் மில்டன்
15-06-2018

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா – எவன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – ரஜாஜ்
என்னோடு நீ இருந்தால் – சைடோ பிலிம் கார்ப்பரேஷன் – மு.ர.சத்யா
கன்னக்கோல் – சர்குரு பிக்சர்ஸ் – வி.ஏ.குமரேசன்
22-06-2018

ஆந்திரா மெஸ் – ஷோபோர்ட் ஸ்டூடியோஸ் – ஜெய்
என்ன தவம் செய்தேனோ – இணைந்த கைகள் கலைக்கூடம் – முரபா செலன்
கார்கில் – சிவானி ஸ்டூடியோ – சிவானி செந்தில்
டிக் டிக் டிக் – தேனாண்டாள் ஸ்டூடியோ – சக்தி செளந்தர்ராஜன்
டிராபிக் ராமசாமி – கிரீன் சிக்னல் பிரைட்லி பிரசண்ட் – விக்கி
29-06-2018

அசுரவதம் – செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ – எம்.மருதுபாண்டியன்
செம போத ஆகாதே – கிக்காஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் – பத்ரி வெங்கடேஷ்
எதுக்குடி காதலிச்ச – அருண் கிரியேஷன்ஸ் – ரவி ராகுல்
ஜூலை மாதம்

06-07-2018

இட்லி – அப்பு மூவிஸ் – ஆர்.கே.வித்யாதரன்
காசு மேல காசு – Raghav Home Entertainment – கே.எஸ்.பழனி
மிஸ்டர் சந்திரமெளலி – ஜி.தனஞ்செயன் – திரு
ரோஜா மாளிகை – ஈஸ்வரன் – கெளதம்
12-07-2018

தமிழ்ப் படம் 2 – எஸ்.சசிகாந்த் – சி.எஸ்.அமுதன்
13-07-2018

கடைக்குட்டி சிங்கம் – டி2 புரொடெக்சன்ஸ், பாண்டிராஜ் புரொடெக்சன்ஸ் – பாண்டிராஜ்
20-07-2018release list of the movies in 2018

போத – 50 50 Film Entertainment – ஜி.சுரேஷ்
ஒண்டிக்கட்ட – பிரண்ட்ஸ் சினி மீடியா – பரணி
மாயா பவனம் – ஜோதி கண்ணன், தன்ஷி – ஓம்.கண்ணாஜி
விண்வெளி பயணக் குறிப்புகள் – யாழ்மொழி, பாபு சங்கர், ஜெயப்பிரகாஷ் – ஜெயப்பிரகாஷ்
27-07-2018

பிரம்மபுத்ரா – தினேஷ் பாபு, ராஜா – தாமஸ்
ஜூங்கா – ஐசரி கணேஷ், அருண் பாண்டியன் – கோகுல்
மோகினி – பிரின்ஸ் புரொடெக்சன்ஸ் – ஆர்.மாதேஷ்
ஆகஸ்ட் மாதம்

03-08-2018

கஜினிகாந்த் – ஸ்டூடியோ கிரீன் – சன்தோஷ் பி.ஜெயக்குமார்
கடிகார மனிதர்கள் – கே.பிரவீஸ், கே.பிரதீப் ஜோஸ் – வைகறை பாலன்
காட்டுப் பய சார் இந்தக் காளி – ஜெய்வந்த் – யுரேகா
மணியார் குடும்பம் – தேன்மொழி கங்குரா – தம்பி ராமையா
நாடோடி கனவு – கே.ராஜேந்திரன் – வீர செல்வா
அரளி – தமிழ் வளவன்- ஏ.ஆர்.சுப்பாராஜ்
எங்க காட்டுல மழை – வள்ளி பிலிம்ஸ் – பாலாஜி
போயா வேலையைப் பார்த்துக்கிட்டு – ராமுலு – விருதை வேல்
கடல் குதிரைகள் – குளோபல் மீடியா இன்வெஸ்ட் – புகழேந்தி தங்கராஜ்
10-08-2018

விஸ்வரூபம்-2 – ஆஸ்கர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – கமல்ஹாசன்
பியர் பிரேமா காதல் – யுவன் சங்கர் ராஜா – இளன்
3 ரசிகர்கள் – சி.ஆர்.சலீம், அண்டோ ஜோஸப் – செபி
அழகு மகன் – ஞானதேவ் அம்பேத்கார், செல்வி ராஜேந்திரன் – அழகன் செல்லா
காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் – வின் பிக்சர்ஸ் – சி.சக்திவேல்
17-08-2018release list of the movies in 2018

கோலமாவு கோகிலா – லைகா புரொடெக்சன்ஸ் – நெல்சன்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – வி.மதியழகன் – ஆர்.ராகேஷ்
ஓடு ராஜா ஓடு – கேண்டில் லைட் புரொடெக்சன்ஸ் – நிஷாந்த்-ஜத்தின்
ஓ காதலனே – அல்லா பிக்சர்ஸ் – எம்.கெளஸர்
24-08-2018

மேற்குத் தொடர்ச்சி மலை – விஜய் சேதுபதி புரொடெக்சன்ஸ் – லெனின் பாரதி
லஷ்மி – பிரமோத் பிலிம்ஸ் – விஜய்
களரி – Senith Keloth – கிரண் சந்த்
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை – கே.எம்.அர்ஜூன்
30-08-2018

இமைக்கா நொடிகள் – சி.ஜெ.ஜெயக்குமார் – அஜய் ஞானமுத்து
31-08-2018

அண்ணனுக்கு ஜே – வெற்றிமாறன் – ராஜ்குமார்
ஆரூத்ரா – VIL Makers – பா.விஜய்
60 வயது மாநிறம் – தாணு – ராதா மோகன்
செப்டம்பர் மாதம்

07-09-2018

வஞ்சகர் உலகம் – மஞ்சுளா பீதா – மனோஜ் பீதா
டார்ச் லைட் – சதா – அப்துல் மஜீத்
தொட்ரா – ஜெய் சந்திர சரவணக்குமார் – மதுராஜ்
அவளுக்கென்ன அழகிய முகம் – கதிரவன் ஸ்டூடியோஸ் – ஏ.கேசவன்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – பிக் பிலிம் இண்டர்நேஷனல் – அழகு ராஜ்
படித்தவுடன் கிழித்து விடவும் – கே.உபா – செ.ஹரி உத்ரா
13-09-2018

சீமராஜா – சிவகார்த்திகேயன் புரொடெக்சன்ஸ் – பொன்ராம்
யு டர்ன் – Srinivasa Chitturi, Rambabu Bandaru – பவன்குமார்
21-09-2018

128. சாமி-2 – சிபு தமீன்ஸ் – ஹரி

129. ராஜா ரங்குஸ்கி – வாசன் புரொடெக்சன்ஸ் – தரணிதரன்

130. ஏகாந்தம் – அன்னை தமிழ் சினிமாஸ் – ஆர்செல் ஆறுமுகம்

131. மேடை – பிரியம் மூவி கிரியேஷன்ஸ் – எஸ்.என்.ஹரிராம்

27-09-2018

132. செக்கச் சிவந்த வானம் – லைகா புரொடெக்சன்ஸ் – மணிரத்னம்

28-09-2018

133. பரியேறும் பெருமாள் – பா.ரஞ்சித் – மாரி செல்வராஜ்

134. ஆடவர் – சரவணன் – Sriranjan

அக்டோபர் மாதம்

04-10-2018

135. 96 – எஸ்.நந்தகோபால் – பிரேம்குமார்

05-10-2018

136. ராட்சசன் – ஜி.டில்லி பாபு – ராம்குமார்

137. நோட்டா – ஸ்டூடியோ கிரீன் – ஆனந்த் சங்கர்

138. யாகன் – யோகராஜா சின்னத்தம்பி – வினோத் தங்கவேல்

12-10-2018

139. ஆண் தேவதை – தாமிரா – தாமிரா

140. மனுசங்கடா – எஸ்.தாரா, ஞான நட்குணன், அம்சன்குமார்

141. கூத்தன் – நீல்கிரிஸ் முருகன் – ஏ.எல்.வெங்கி

142. அடங்காப் பசங்க – ஆர்.செல்வநாதன் –ஆர்.செல்வநாதன்

143. மூணாவது கண் – அருணாலயா சினிமாஸ் – ஏ.வி.கிரி

144. களவாணி சிறுக்கி – ஆர்.நமச்சிவாயம் – ரவி ராகுல்

145. அமாவாசை – ஜெயா பிலிம்ஸ் – ராகேஷ் சவந்த்

17-10-2018release list of the movies in 2018

146. வட சென்னை – வுண்டர்பார் பிலிம்ஸ் – வெற்றி மாறன்

18-10-2018

147. சண்டக்கோழி-2 – விஷால் பிலிம் இண்டர்நேஷனல் – என்.லிங்குசாமி

26-10-2018

148. ஜருகண்டி – நிதின் சத்யா, பத்ரி கஸ்தூரி – பிச்சுமணி

149. எழுமின் – வி.பி.விஜி – வி.பி.விஜி

நவம்பர் மாதம்

02-11-2018

150. வன்முறைப் பகுதி – ஆருத்ரா சினி புரடக்சன்ஸ்  – நாகராஜ்

151. சந்தோஷத்தில் கலவரம் – ஸ்ரீகுரு சினிமாஸ் – கிராந்தி பிரசாத்

152. ராக தாளங்கள் – திருப்பதி ராஜன்

06-11-2018

153. சர்கார் – சன் பிக்சர்ஸ் – ஏ.ஆர்.முருகதாஸ்

154. களவாணி மாப்பிள்ளை – காந்தி மணிவாசகம் – காந்தி மணிவாசகம்

155. பில்லா பாண்டி – கே.சி.பிரபாத் – ராஜ் சேதுபதி

16-11-2018

156. காற்றின் மொழி – ஜி.தனஞ்செயன் – ராதா மோகன்

157. திமிரு புடிச்சவன் – பாத்திமா விஜய் ஆண்டனி – கணேஷ்

158. உத்தரவு மகாராஜா – ஏ.எல்.உதயா – ஆசிப் குரேஷி

23-11-2018

159. செய் – உமேஷ், மன்னு – ராஜ் பாபு

160. பட்டினப்பாக்கம் – ரோகித், ராய் முல மூட்டில் – ஜெயதேவ் மேனன்

161. வண்டி – ரூபி பிலிம்ஸ் – ராஜேஷ் பாலா

162. கரிமுகன் – விமல் பிக்சர்ஸ் – செல்லத் தங்கையா

163. செம்மறி ஆடு – பைசா கிரியேஷன்ஸ் – சதீஷ் சுப்ரமணியம்

164. கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் – மாரியப்பன் ராஜகோபால் – எம்.ஏ.பாலா

165. சகவாசம் – சத்தியன் மூவிஸ் – தாமஸ் நியூட்டன்

29-11-2018

166. 2.0 – லைகா புரொடெக்சன்ஸ் – ஷங்கர்

டிசம்பர் மாதம்

7-12-2018

167. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு – சார்மிளா மாண்ட்ரே, ஆர்.சாவண்ட் – ஏ.ஆர்.முகேஷ்

168. சீமத்துரை – இ.சுஜய் கிருஷ்ணா – சந்தோஷ் தியாகராஜன்

169. தோனி கபடி குழு – எஸ்.நந்தகோபால் – ஐயப்பன்

170. வினை அறியார் – கே.டி.முருகன் – கே.டி.முருகன்

14-12-2018

171. துப்பாக்கி முனை – தாணு – தினேஷ் செல்வராஜ்

172. ஜானி – தியாகராஜன் – மகேந்திரன்

173. பயங்கரமான ஆளு – பரிஷ்த்தா பிக்சர்ஸ் – அரசர் ராஜா

174. திரு – ராக் எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் – கார்த்திக் சிவன்

175. துலாம் – விஜய் விகாஷ் – ராஜா நாக ஜோதி

20-12-2018

176. சீதக்காதி – Passion Studios – பாலாஜி தரணிதரன்

21-12-2018

177. கனா – சிவகார்த்திகேயன் – அருண்ராஜா காமராஜ்

178. மாரி-2 – வுண்டர்பார் பிலிம்ஸ் – பாலாஜி மோகன்

179. அடங்க மறு – ஹோம் மீடியா வொர்க்ஸ் – கார்த்திக் தங்கவேல்

180. சிலுக்குவார்பட்டி சிங்கம் – விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு

28-12-2018

181. பிரான்மலை – கே.சி.பாண்டியன் – அகரம் கமுரா

182. காட்சிப் பிழை – பி.ராஜசேகரன் – மகி

கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு வருடமும் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருந்தன. ஆனால் இந்தாண்டு தயாரிப்பாளர் சங்கம் கிட்டத்தட்ட 50 நாட்கள் படங்களை திரையிடாமல் வேலை நிறுத்தத்தை நடத்தியதால் சுமார் 40 திரைப்படங்கள் திரையிடப்பட முடியாமல் போய்விட்டன.

கடந்த 1930 முதல் 2010-ம் ஆண்டு வரையிலுமான காலக்கட்டத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் மொத்த எண்ணிக்கை 5665.

2011-ம் ஆண்டு = 143, 2012-ம் ஆண்டு = 161, 2013-ம் ஆண்டு = 164, 2014-ம் ஆண்டு = 213, 2015-ம் ஆண்டு = 203, 2016-ம் ஆண்டு = 209, 2017-ம் ஆண்டு = 207, 2018-ம் ஆண்டு = 182 என்ற கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இவற்றையும் கணக்கிட்டால் இதுவரையிலும் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்களின் மொத்த எண்ணிக்கை 7147 ஆகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios