Asianet News TamilAsianet News Tamil

ரஜினி, விஜய்சேதுபதி, நயன்தாரா ஜாதகங்கள்... என்ன சொல்லுது 2018 கோலிவுட் டைரி..!

இந்த ஆண்டில் தமிழகத்தின் முக்கிய ஹீரோக்கள் அனைவருக்குமே படம் ரிலீஸாகி இருக்கிறது. தல அஜித்தை தவிர. படம் கொடுத்தவர்களில் யார் டாப்பு, யார் ஃபிளாப்பு? ஒரு பரபர அலசலுக்குள் நுழைவோமா மக்கழே?.

Rajini, Vijaysethupathi, Nayanthara Horoscope ... What is the 2018 Kollywood Diary
Author
Tamil Nadu, First Published Dec 30, 2018, 4:00 PM IST

ஒரு வருடத்தின் கடைசி மணிநேரங்களை நகர்த்திக் கொண்டிருக்கோம். முடியப் போகும் வருடத்தின் முக்கிய நிகழ்வு ஆல்பங்களை புரட்டிப் பார்ப்பதில் அலாதி சந்தோஷம் இருக்கிறது. அதிலும் 2018 - சினிமா ஆல்பத்தை புரட்டுவதென்பது எக்ஸ்ட்ரா புத்துணர்ச்சியல்லவா!

இந்த ஆண்டில் தமிழகத்தின் முக்கிய ஹீரோக்கள் அனைவருக்குமே படம் ரிலீஸாகி இருக்கிறது. தல அஜித்தை தவிர. படம் கொடுத்தவர்களில் யார் டாப்பு, யார் ஃபிளாப்பு? ஒரு பரபர அலசலுக்குள் நுழைவோமா மக்கழே?.... Rajini, Vijaysethupathi, Nayanthara Horoscope ... What is the 2018 Kollywood Diary

* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு காலா, 2.0 என இரண்டு படங்கள் ரிலீஸ். இதில் இரண்டாவது படம் வர்த்தகரீதியில் கை மட்டும் கை கொடுத்திருக்கிறது. ஆனால் இரண்டு படங்களுமே வெற்றிக் கோட்டின் நிழலை கூட தொடவில்லை. சிட்டி ரஜினி, 3டி, ரோபோட், அக்‌ஷய் ஆகிய விஷயங்கள் இல்லாவிட்டால் வர்த்தக ரீதியிலும் இந்தப்படம் தோல்வியடைந்திருக்கும். 

* விஜய் சேதுபதிக்கு ஏழு படங்கள் ரிலீஸ்! ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்க சிவந்த வானம், 96, டிராம்பிக் ராமசாமி (கெஸ்ட் ரோல்), இமைக்கா நொடிகள், சீதக்காதி ஆகியன. இதில் 96 பிளாக் பஸ்டர் ஹிட். செ.சி.வா-வில் குரூப்பில் ஒன்றாக வந்திருந்தார். ஆனால் படம் செம்ம ஹிட். இமைக்கா நொடிகளிலும் கேமியோ ரோல்தான், படம் சூப்பர் ஹிட். ஜூங்கா, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், டிராபிக் ராமசாமி, சீதக்காதி ஆகியன தோல்வி படங்கள்.  ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு, விஷால் தனது நடிப்பின் வெறித்தனத்தை கொட்டியிருந்த படம் அது. 

* கமல்ஹாசனுக்கு விஸ்வரூபத்தின் சீக்வெல் படமனா ‘விஸ்வரூபம் 2’ வெளியானது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியான விஸ்வரூபம் படத்தை உலகமே கொண்டாடியது. ஆனால் எந்த ஆரவாரமும் இல்லாமல் வெளியான பார்ட் -2, வந்த வேகத்திலேயே சிப்-புக்குள் சுருண்டுவிட்டது.

 Rajini, Vijaysethupathi, Nayanthara Horoscope ... What is the 2018 Kollywood Diary

* விஜய்க்கு சர்கார் ரிலீஸானது. தீபாவளிக்கு வெளியான இந்த சரவெடியின் சத்தத்தில் தமிழத்தை ஆளுங்கட்சிக்கு காது கிழிந்தது. அதேநேரத்தில் பாக்ஸ் ஆபீஸிலும் செம்ம அள்ளு அள்ளியிருக்கிறது. 

* சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா மட்டும் ரிலீஸ். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்தி - பொன்ராம் - இமான் கூட்டணியின் மூன்றாவது படமான இது மெகா தோல்வியை சந்தித்தது. 

* தனுஷுக்கு வடசென்னை மற்றும் மாரி 2 ரிலீஸ். இதில் முன்னது பெரியளவில் பெயரையும், கணிசமான வசூலையும் தந்தது. இரண்டாவது...தொடர் விடுமுறை நாட்களில் பெரும் பில்ட் அப் விளம்பரங்களுடன் வெளியானதால் ஓரளவு வசூலை சந்தித்தது. ஆனாலும் படம் பப்படமே.

  Rajini, Vijaysethupathi, Nayanthara Horoscope ... What is the 2018 Kollywood Diary

* விஷாலுக்கு இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ரிலீஸானது. முன்னது அருமையாக கைகொடுத்தது. வசூல், கதையம்சம் என எல்லாமே சூப்பர். ஆனால், மெகா ஹிட் சண்டக்கோழியின் சீக்வெலான செகண்ட் பார்ட் ...சீக்கு விழுந்த கோழியாகிவிட்டது. 

* சூர்யாவுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரிலீஸ். கட்டாய வெற்றியை எதிர்பார்த்து பெரிதாய் இந்தப்படம் ரிலீஸாகி, செமத்தியாய் அடிபட்டது. சொடக்கு பாட்டு கூட கைதட்ட வைக்கவில்லை திரையில்.

* கார்த்திக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ மட்டும் வந்தது. விவசாயத்தின் பெருமை பேசிய இந்தப்படம் வசூல், வரவேற்பு என எல்லா லெவலையும் திருப்தி செய்தது. 

* அதர்வாவுக்கு செம போத ஆகாதே! மற்றும் இமைக்கா நொடிகள் ரிலீஸானது. இதில் ரெண்டாவது படம் எல்லா வகையிலும் ஹிட் அடித்தது. 

* நடிப்பு அசுரன் என்று பட்டம் பெற்ற விக்ரம்-க்கு ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர் என இரண்டு ரிலீஸ். ஸ்கெட்ச்  ஓரளவு திருப்தியை தந்ததாக தகவல். ஆனால் சாமி எனும் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தின் செகண்ட் பார்ட்டான சாமி ஸ்கொயர் மெக பிளாப்.

* ஜெயம் ரவிக்கு டிக் டிக் டிக், அடங்க மறு என இரண்டு படங்கள். இவை இரண்டுமே நல்ல பெயர் வாங்கி தந்திருக்கின்றன அவருக்கு. 
இது போக அர்விந்த் சாமி, விஷ்ணு விஷால், ஜீவா, ஆர்யா, விஜய் ஆண்டனி, ஜெய்...என்று  மற்றவர்களும் களமிறங்கியிருந்தனர். இதில் அர்விந்த் சாமிக்கு செ.சி.வானமும், விஷ்ணு விஷாலுக்கு ராட்சசனும் சந்தோஷத்தையும், பெரும் மகிழ்ச்சியையும் தந்தன. 

* நடிகைகளில் கீர்த்தி சுரேஷூக்கு ஐந்து படங்கள் ரிலீஸ். இதில் நடிகையர் திலகம் படம் அவரை நல்ல நடிகையாக அடையாளப்படுத்தியது, சர்காரோ ‘மாஸ் பட ஹீரோயின்’ அந்தஸ்தை தந்தது. Rajini, Vijaysethupathi, Nayanthara Horoscope ... What is the 2018 Kollywood Diary

* ஜஸ்வர்யா ராஜேஷுக்கும் ஐந்து படங்கள் ரிலீஸ். இதில் வடசென்னை, செ.சி.வா., கனா ஆகிய மூன்று படங்கள் வசூல் மற்றும் வரவேற்பு ரீதியில் ஹிட். மூன்று படங்களிலும் வித்தியாசமான கேரக்டர் மற்றும் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்து, தனிச்சிறப்பான நாயகியாக வளர்ந்து வருகிறார். வரும் வருடம் அவருக்கு இதைவிட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். 

* வரலட்சுமிக்கும் ஐந்து படங்கள் ரிலீஸ். இதில் சர்கார் எனும் மாஸ் படத்தில் மெகா வில்லியாக கலக்கியிருந்தார்! வெறும் கதாநாயகி வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் கேரக்டர் ரோலில் வரு வளர்ந்து வருவது அழகு. 

* சமந்தாவுக்கு மூன்று படங்கள் ரிலீஸ். இதில் இரும்புத்திரை கைகொடுத்தது. சீம ராஜா காலை வாரியது. 

* சாயிஷாவுக்கு 3 படங்களில் கடைக்குட்டி சிங்கம் கைகொடுத்தது. 

* சீனியர் நடிகை ஜோதிகாவுக்கு நாச்சியார், செ.சி.வா, காற்றின் மொழி என மூன்றுமே அருமையான பெயரை பெற்றுத் தந்தன. 

* லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் இரண்டுமே ஹிட் படங்கள். ‘ஹீரோ’ அந்தஸ்துக்கு அவர் உயர இரண்டுமே தோள்கொடுத்துள்ளன. Rajini, Vijaysethupathi, Nayanthara Horoscope ... What is the 2018 Kollywood Diary

* த்ரிஷா மோகினியில் ஏமாந்தாலும், 96 படத்தின் மெகா ஹிட்டுக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதற்கான ரிவார்டாக ‘பேட்ட’ வாய்ப்பு கிடைத்துள்ளது. 

* அமலா பாலுக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் காலை வாரினாலும், ராட்சசன் நன்றாகவே கைகொடுத்தது. இவர்கள் தவிர ரெஜினா, சாய்பல்லவி, ஹன்சிகா, தமன்னா, அஞ்சலி, கேத்ரின் தெரேசா உள்ளிட்ட பல கிளிகளும் ரேஸில் இறங்கினர். இதில் சிலருக்கு சந்தோஷம் கிடைத்தாலும் பலருக்கு வாட்டமே மிஞ்சியது!

Follow Us:
Download App:
  • android
  • ios