Asianet News TamilAsianet News Tamil

சீச்சீ... என்ன கண்றாவி இது காஜல் அகர்வால்...?... பெண் சமூகப் போராளிகள் மேடைக்கு வரவும்...

அப்படம் பெற்ற பெரும்வெற்றியால் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகி தற்போது ரிலீசுக்கும் தயாராக உள்ளது.’பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் உருவாகும்  இதன் தமிழ்ப் பதிப்பை ரமேஷ் அரவிந்த் இயக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

paris paris first look teaser
Author
Chennai, First Published Dec 23, 2018, 11:18 AM IST

இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட படம் ‘குயின்’.இதில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.paris paris first look teaser

அப்படம் பெற்ற பெரும்வெற்றியால் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகி தற்போது ரிலீசுக்கும் தயாராக உள்ளது.’பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் உருவாகும்  இதன் தமிழ்ப் பதிப்பை ரமேஷ் அரவிந்த் இயக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

நேற்று வெளியிடப்பட்ட இதன் தமிழ் டீஸரில் பல செக்ஸ் வசனங்களுக்கு மத்தியில் இன்னொரு பெண் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அழுத்தும் தர்மசங்கடமான காட்சி சென்சாருக்கு தப்பி வெளியாகியுள்ளது.paris paris first look teaser

குயின் படத்தில் கங்கனா வித்தியாசமான ஒரு உடை அணிந்திருப்பார், அப்போது அவர் உள்ளாடை அணிந்துள்ளாரா என்று பார்ப்பதற்கு கங்கனாவின் மார்பங்களை லிசா அழுத்திவிடுவார். இதனால் கங்கனா அதிர்ச்சி அடைவார். அதே போன்றதொரு காட்சிதான் தற்போது  பாரீஸ் பாரீஸ் படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் காட்சியிலும் எல்லி அவ்ரம், காஜலின் மார்பகத்தை அழுத்தி உள்ளாடை இருக்கிறதா என்று சோதித்து பார்க்கிறார்.

இந்தி ரசிகர்கள் இதுபோன்ற பல அதிர்ச்சிக் காட்சிகளைப் பார்த்து மனதளவில் தயாராகிவிட்டனர். ஆனால் தமிழில் இது கண்டிப்பாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். குறிப்பாக சமூக வலைதளங்களில் பெண்போராளிகள் கொதித்து எழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios