Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் ஸ்டார் மேனேஜரோடு இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

கோலிவுட் ரசிகர்கள் மனதை நடிப்பாலும், அழகாலும் கொள்ளையடித்து லேடி 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இந்த பட்டத்திற்கு ஏற்ற போல் அவர் நடித்தாலே, அந்த படம் ஹிட் என நம்புகிறார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
 

nayanthara join next movie with super star manager
Author
Chennai, First Published Feb 23, 2019, 6:38 PM IST

கோலிவுட் ரசிகர்கள் மனதை நடிப்பாலும், அழகாலும் கொள்ளையடித்து லேடி 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இந்த பட்டத்திற்கு ஏற்ற போல் அவர் நடித்தாலே, அந்த படம் ஹிட் என நம்புகிறார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

மேலும் நயன்தாராவும், பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை குறைத்து கொண்டு, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

nayanthara join next movie with super star manager

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரட்டை வேடத்தில் 'ஐரா'  படத்திலும், சிவகார்த்திகேயனுடன் 'Mr.லோக்கல்' படத்திலும், நடித்து வருகிறார். இவ்விரு படங்களுமே விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் 'தளபதி 63', 'கொலையுதிர்க்காலம், 'சயிர நரசிம்மரெட்டி, லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara join next movie with super star manager

இந்த நிலையில் நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நயன்தாராவின் புதிய படத்தை வேல்மதி என்பவர் இயக்க உள்ளதாகவும்.  இந்த படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கவிருப்பதாகவும், கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios