Asianet News TamilAsianet News Tamil

’இவ்வளவு நாளா எந்த ‘பேட்ட’யில இருந்தீங்க மிஸ்டர் சமூகப்போராளி கார்த்திக் சுப்பாராஜ்?


பொங்கலுக்கு தான் ரஜினியை வைத்து இயக்கும் ‘பேட்ட’ படம் ரிலீஸாவதை ஒட்டி, நந்திஸ் சுவாதி ஆணவக்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டு,  திடீர் சமூகப்போராளி அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். 

karthik subbaraj tweets on nandhis swathy murder
Author
Chennai, First Published Nov 18, 2018, 5:40 PM IST

பொங்கலுக்கு தான் ரஜினியை வைத்து இயக்கும் ‘பேட்ட’ படம் ரிலீஸாவதை ஒட்டி, நந்திஸ் சுவாதி ஆணவக்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டு,  திடீர் சமூகப்போராளி அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். karthik subbaraj tweets on nandhis swathy murder

’பிஸ்சா’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த கார்த்திக் சுப்பாராஜ் இதுவரை தமிழ்சமூகத்தின் பொதுப்பிரச்சினைகள் எதற்கும் குரல் கொடுக்காமல் வேற்றுகிரகவாசி போலவே ஒதுங்கி இருந்தவர். பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ராம், அமீர், வெற்றிமாறன், கரு.பழனியப்பன் போன்ற சில இயக்குநர்கள் தமிழகத்தின் சில பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தபோதெல்லாம் ஷங்கர், மணிரத்னம் ரேஞ்சில் வெறுமனே வேடிக்கை பார்த்தவர்இவர்.

இன்று திடீரென சமூகப் போராளியாக மாறி நந்திஸ், சுவாதி ஆணவக்கொலை குறித்து, ‘எத்தனை காலத்துக்குத்தான் இந்த ஆணவக்கொலைகளை சகித்துக்கொள்ளவேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூவியிருக்கிறார்.karthik subbaraj tweets on nandhis swathy murder

ரஜினியை வைத்து இவர் இயக்கியிருக்கும்’பேட்ட’ பொங்கலுக்கு ரீலீஸ் ஆவதால் நாமளும் ஒரு தமிழ்ப்போராளியாக மாறுவோம். அது படத்தின் பப்ளிசிட்டிக்கு பயன்படலாம் என்று இந்த குண்டுப் பையன் நினைத்திருப்பார் போல.

Follow Us:
Download App:
  • android
  • ios