Asianet News TamilAsianet News Tamil

உற்சாக மூடில் இருந்த கவுதம் மேனனை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிய இளம் இயக்குநர்...

பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட, அதுகுறித்து ட்விட்டரில் அடிக்கடி புலம்பி வந்தார் கார்த்திக் நரேன். இது தொடர்பாக கவுதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் அடிக்கடி மோதல்கள் நடந்து வந்தன.பின்னர் ‘நரகாசூரன்’ படத்தை மறந்துவிட்டு  கார்த்திக் நரேன் தொடங்கிய 'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, டிசம்பர் வெளியீட்டுக்காகத் தயாராகி வருகிறது.
 

karthik narein tweets against goutham menon
Author
Chennai, First Published Nov 4, 2019, 10:36 AM IST

நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’படத்துக்கு விடிவு காலம் பிறந்து தனது அடுத்த பட அறிவிப்பையும் இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ள நிலையில் அவரை மாபெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் இயக்குநர் ஒருவர்.karthik narein tweets against goutham menon

’துருவங்கள் 16’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட, அதுகுறித்து ட்விட்டரில் அடிக்கடி புலம்பி வந்தார் கார்த்திக் நரேன். இது தொடர்பாக கவுதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் அடிக்கடி மோதல்கள் நடந்து வந்தன.பின்னர் ‘நரகாசூரன்’ படத்தை மறந்துவிட்டு  கார்த்திக் நரேன் தொடங்கிய 'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, டிசம்பர் வெளியீட்டுக்காகத் தயாராகி வருகிறது.karthik narein tweets against goutham menon

இந்நிலையில் நேற்று முன் தினம் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவன ஆதரவால் மீண்டும் எழுந்து நின்ற கவுதமின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'ஜோஷ்வா’ ’இமை போல் காக்க' ஆகிய படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சியிலிருந்தார் கெளதம் மேனன். இது தொடர்பான தனது மகிழ்ச்சியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.அப்போது 'துருவ நட்சத்திரம்' தொடர்பாக "என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கலைவடிவமான இந்தப் படம் இல்லாமல் இந்த சீஸன் முடிந்து விடாது. விக்ரமுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம் . அடுத்த 60 நாட்களில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து 'துருவ நட்சத்திரம்' வெளியீட்டுக்குத் தயாராகும்" என்று ட்வீட் செய்திருந்தார் கெளதம் மேனன்.

இதுவரை பொறுமை காத்த கார்த்திக் நரேன் "இது எப்போது பகலின் வெளிச்சத்தைப் பார்க்கும் என்ற தெளிவான விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும் சார். ஆம், இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது" என்று ட்விட் செய்து கூடவே தனது ‘நரகாசூரன்’பட போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இப்பதிவால் பெரும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார் கவுதம் மேனன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios