Asianet News TamilAsianet News Tamil

சைலண்டாக 100 கோடி வசூலை நெருங்கும் கார்த்தியின் ‘கைதி’...

தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னதாக விஜய்யின் ‘பிகில்’படத்துடன் ரிலீஸான கார்த்தியின் கைதி படம் தனுஷின் சமீபத்தைய ரிலீஸான அசுரன் படம் போலவே வெளியான அனைத்து மொழிகளிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. கதநாயகன் கார்த்திக்கு 8 கோடி சம்பளம், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 60 லடசம், இன்னொரு கதாநாயகம் நரேனுக்கு 30 லட்சம் தரப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் 25 கோடி என்று சொல்லப்படுகிறது.

karthi movie kaithi reaches 100 crore mile stone
Author
Chennai, First Published Nov 6, 2019, 12:15 PM IST

சுமார் 25 கோடி பட்ஜெட்டில் தயாரான லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணியின் கைதி படம் முதல் 12 நாட்களில் மட்டும் 80 கோடி வசூல் சாதனையை எட்டியிருப்பதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் 100 கோடி வசூல் சாதனையைத் தாண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.karthi movie kaithi reaches 100 crore mile stone

தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னதாக விஜய்யின் ‘பிகில்’படத்துடன் ரிலீஸான கார்த்தியின் கைதி படம் தனுஷின் சமீபத்தைய ரிலீஸான அசுரன் படம் போலவே வெளியான அனைத்து மொழிகளிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. கதநாயகன் கார்த்திக்கு 8 கோடி சம்பளம், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 60 லடசம், இன்னொரு கதாநாயகம் நரேனுக்கு 30 லட்சம் தரப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் 25 கோடி என்று சொல்லப்படுகிறது.karthi movie kaithi reaches 100 crore mile stone

இந்த நிலையில், படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.80 கோடி வசூலித்திருக்கிறது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் சேர்த்து 12 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் ‘கைதி’ இன்னும் சில தினங்களில் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பு உற்சாகமாக அறிவித்திருக்கிறது. துவக்கத்தில் 250 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு அடுத்த மூன்று தினங்களில் தமிழகத்தில் மட்டும் 100 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. இதே நிலை கேரளா மற்றும் ஆந்திராவிலும் நீடித்தது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளரின் இத்தகவலை விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கூட வழிமொழிவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios