Asianet News TamilAsianet News Tamil

உண்மையான உலக நாயகன் கமலின் சாதனைகளில் சில துளிகள்...கமல் 65’ ஸ்பெஷல்...

தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. சென்னை சபையரில் 600 நாட்களும், கோவை ராயலில் 450 நாட்களும் ஓடியது.தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய ஹிந்திப் படம், கமல்ஹாசனின் ஏக் துஜே கே லியே. சென்னை அலங்காரில் 175 நாட்கள் ஓடியது.
ஒரே ஆண்டில்(1982) நான்கு முறை 200 நாட்களுக்கு மேல் ஓடியது உலகிலேயே கமல்ஹாசனின் படங்கள் தான்.

kamal's 65th birthday...his lifetime achievements
Author
Chennai, First Published Nov 7, 2019, 9:54 AM IST

கமலின் 65 வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவின் கர்வத்துக்குரிய கலைஞன் எப்போதுமே கமல்தான் என்றாலும் அவரது படங்களின் வசூல் ரஜினி படங்களை விட குறைவுதான் என்ற மாயைகள் நீண்ட காலமாக உள்ளன. ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய அளவில், அவ்வளவு ஏன் உலக அளவில் கூட யாரும் செய்யாத பல வசூல் சாதனைகளுக்கு சொந்தக்காரர் கமல்தான். கீழ்க்கண்ட தகவல்களைப் படித்தால் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பது புரியும்.kamal's 65th birthday...his lifetime achievements

அமெரிக்காவில் 13 தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் 'நாயகன்'.
சென்னையில் அதிக திரையரங்கங்களில் வெளியான முதல் திரைப்படம், கமல்ஹாசனின் "வேட்டையாடு விளையாடு" - 16 தியேட்டர்கள்.

சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் (10 திரையரங்குகளிலும் ) வரை திரையிடப்பட்டது.

திரையுலகில் முதலில் கண் தானம் செய்தவர் கமல்ஹாசன். திரையுலகில் முதலில் உடல் தானம் (2002) செய்தவரும் அவரேதான்.
தமிழ்நாட்டில் முதலில் 100 நாள் ஓடிய மலையாளப் படம், கமல்ஹாசனின் ராசலீலா. சென்னை எலிபென்ஸ்டனில் 112 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய கன்னடப் படம், கமல்ஹாசனின் கோகிலா. சென்னை எமரால்டில் 175 நாட்கள் ஓடியது.kamal's 65th birthday...his lifetime achievements

தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. சென்னை சபையரில் 600 நாட்களும், கோவை ராயலில் 450 நாட்களும் ஓடியது.தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய ஹிந்திப் படம், கமல்ஹாசனின் ஏக் துஜே கே லியே. சென்னை அலங்காரில் 175 நாட்கள் ஓடியது.
ஒரே ஆண்டில்(1982) நான்கு முறை 200 நாட்களுக்கு மேல் ஓடியது உலகிலேயே கமல்ஹாசனின் படங்கள் தான்.
சனம் தேரி கசம்
மூன்றாம் பிறை
வாழ்வே மாயம்
சகலகலா வல்லவன்

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்.
பல்லவி ( 175 நாட்கள் )
நட்ராஜ்( 112 நாட்கள் )
லட்சுமி( 112 நாட்கள் )
கல்பனா( 110 நாட்கள் )
சாந்தி( 105 நாட்கள் )

தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படம், தமிழில் கமல்ஹாசன் நடித்து தயாரித்த "விக்ரம்" (1986) படமே.#1986ல் தன் ரசிகர்களுக்கு மாநாடு நடத்திய முதல் நடிகர் கமல்ஹாசனே.kamal's 65th birthday...his lifetime achievements

1988ல் முதல் முறையாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்து அதனை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசனே.

தமிழ் நாட்டில் 100 நாட்கள் ஓடிய முதல் டப்பிங் படம், கமல்ஹாசனின் இரு நிலவுகள், அதை தொடர்ந்து #சலங்கைஒலி #சிப்பிக்குள்முத்து, #இந்திரன்சந்திரன், #பாசவலை என்று தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட கமலின் அனைத்து படங்களும் #100நாட்களுக்கு மேல் ஓடியவை.

தமிழில் நாயகன் படத்தில் முதல்முறையாக முடியை ஜெல் மூலம் வழித்து நடித்தார். பின் வந்த படங்களில் அதுவே ஸ்டேன்டர்டு ஆனது, ஊரின் தலைவராக ஹீரோ இருந்தால் ( சின்ன கவுண்டர், நாட்டாமை... ).

இந்தியாவில் முதல் முறையாக டால்பி சவுண்டில் எடுக்கப் பட்ட முதல் படம், கமல்ஹாசனின் #குருதிப்புனல்(1995).

இந்தியாவில் தொடர்ந்து #1000காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய முதல் படம் கமல்ஹாசனின் "#சகலாகலாவல்லவன்".

முகநூலில் கமல்ராஜன்...

Follow Us:
Download App:
  • android
  • ios