Asianet News TamilAsianet News Tamil

“அவசரப்பட்டுவிட்டேன்….பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்”.....நடிகர் கமல் ஹாசன் மக்களுக்கு  உருக்கம்: மோடிக்கும் முக்கியச் செய்தி இருக்கிறது

kamal hassan write about modi and demonitisation
kamal hassan  write about modi and demonitisation
Author
First Published Oct 18, 2017, 4:05 PM IST


“அவசரப்பட்டுவிட்டேன்….பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்”.....நடிகர் கமல் ஹாசன் மக்களுக்கு  உருக்கம்: மோடிக்கும் முக்கியச் செய்தி இருக்கிறது

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை விஷயத்தில் ஆய்வு செய்யாமல் ஆதரவு தெரிவித்துவிட்டேன். அதற்கு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ளநோட்டுகள், ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும் புழக்கத்தில் உள்ள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு நடிகர் கமல் ஹாசன் உடனடியாக டுவிட்டரில் ஆதரவு தெரிவித்தார்.

kamal hassan  write about modi and demonitisation

ஊழலை ஒழிக்கும் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு கட்சி சார்பில்லாமல் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அப்போது டுவிட்டரில் கோரியிருந்தார். 

இந்நிலையில், சமீப காலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு ரூபாய் நோட்டு தடைதான் காரணம் என்று சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் கருத்துக்களை கூறி வருகின்றன, மேலும், பா.ஜனதா கட்சியினர் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையை சுய நலத்துக்காக செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

kamal hassan  write about modi and demonitisation

இதற்கு ஆளும் பா.ஜனதா அரசு தரப்பில் இருந்து வலுவான பதில்களும், எதிர்வினையும் இல்லை.

இந்நிலையில், “ஆனந்தவிகடன்” வாரப் பத்திரிகையில் “என்னுள் மையம் கொண்ட புயல்” எனும் தொடரை நடிகர் கமல் ஹாசன் எழுதிவருகிறார்.

 அதில் ரூபாய் நோட்டு தடை நடவடிக்ைகக்கு ஆதரவு தெரிவித்தது ஆய்வு செய்யாமல் அவசரப்பட்டு செய்த நடவடிக்கை, இதற்கு பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது-

ரூபாய் நோட்டு தடையை பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையரைகள் கடந்து ஊழலை ஒழிக்கும் இந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டேன். இதனால், விளையும் சிறு இடையூறுகளையும், கஷ்டங்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஆனால், நான் ரூபாய் நோட்டு தடைக்கு ஆதரவு தெரிவித்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். என்னை தொலைபேசியில் அழைத்து, என் ஆதரவுக்கு எதிராக தங்களின் விமர்சனங்களை முன்வைத்தனர்.

kamal hassan  write about modi and demonitisation

ஆனால், சிறிது நாட்களுக்கு பின் ரூபாய் நோட்டு தடையை செயல்படுத்திய விதம் தவறானது, ஆனால், பிரதமர் மோடியின் திட்டம் நல்லதிட்டம் தான் என மனதை தேற்றினேன். ஆனால், பலபொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. நல்ல திட்டம் ஆனால், செயல்படுத்தும் முறையில் தோல்வி அடைந்துவிட்டது என மனதை தேற்றினேன்.

ஆனால், இப்போது, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பை கபடமானது போலியானது என்று உரத்த குரலில் வரும் விமர்சனங்களுக்கு ஆளும் கட்சியிடம் இருந்தும், மத்தியஅரசிடம் இருந்தும் பலவீனமான பதில்களே வரும் போது யோசிக்க வைக்கிறது.

kamal hassan  write about modi and demonitisation

ரூபாய் நோட்டு தடை திட்டத்துக்கு நான் அவசரப்பட்டு பாராட்டு தெரிவித்துவிட்டதை நினைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதேசமயம், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருக்காமல், பிரதமர் மோடியும் தனது தவற்றை ஒப்புக்கொண்டால், அவருக்கு எனது “சலாம்” காத்திருக்கிறது.

தவறுகளை திருத்திக்கொள்வதும், அதை ஒப்புக்கொள்வதும்தான் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios