Asianet News TamilAsianet News Tamil

பொங்கலுக்கு விஸ்வாசம் மட்டும் தான் ரிலீஸ் ஆக இருந்தது, அடாவடியாக பேட்ட படத்த ரிலீஸ் பண்ணாங்க! J.K.ரிதேஷ் காட்டம்

சன் பிக்சர்ஸ் சினிமாவிற்க்குள் வந்தால் சினிமா அழிந்துவிடும் என்று,  கடந்த தீபாவளியும், பொங்கலுக்கும் அவங்க படத்தையே ரிலீஸ் செய்கிறார்கள் என நடிகர் ஜேகே ரித்தீஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Jk rithish against petta production company sun pictures
Author
Chennai, First Published Feb 8, 2019, 7:54 PM IST

படப்பிடிப்பைத் தொடங்கியபோதே 2019 பொங்கல் தேதியை டார்கெட் செய்துவிட்டது சத்யஜோதி ஃபிலிம்ஸ். ஆனால், சன் பிக்சர்ஸ் குழுமம் அடாவடியாக பொங்கல் ரிலீஸாக பேட்ட படத்தை அறிவித்தது. போட்டியிட்டு இரு பக்கமும் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க அஜித் திரைப்படம் பின்வாங்கும் என்றே  சொல்லப்பட்டது. ஆனால், அஜித் பட டீமோ யார் படம் வேணும்னாலும் வரட்டும், படம் நல்ல இருந்தால் தான் மக்கள் பார்ப்பாங்க.

Jk rithish against petta production company sun pictures

நாம ரசிகர்களை மட்டும் குறி வைத்து இந்த படத்தை எடுக்கல, நம்ம மெயின் டார்க்கெட்டே ஃபேமிலி ஆடியன்ஸ் தான் அதனால தில்லா நம்ம படத்தை ரிலீஸ் பண்ணலாம், என உறுதியாக பொங்கல் ரிலீசிலிருந்து பின்வாங்கவில்லை விஸ்வாசம் டீம். 

Jk rithish against petta production company sun pictures

ஆனால் கடைசி நேரத்தில் சன்பிக்சர்ஸ் தனது தயாரிப்பான பேட்ட படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்தது. இது பல விநியோகஸ்தரர்களை கவலையுற செய்தது. விஸ்வாசம் படமும் படக்குழு எதிர்பார்த்ததைப் போலவே தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூலை முந்தி சாதனை நிகழ்த்தியது.

Jk rithish against petta production company sun pictures

இது குறித்து பேட்டி ஒன்றில் அரசியல்வாதியும் நடிகருமான J.K.ரிதேஷ், "நான் அப்போவே சொல்லிவிட்டேன் சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்ரேட் கம்பெனிகள் சினிமாவிற்க்குள் வந்தால் சினிமா அழிந்துவிடும் என்று. இப்போது கூட இந்த பொங்கலுக்கு அஜித் சாரின் விஸ்வாசம் மட்டும் தான் வர வேண்டியது. ஆனால் சன்பிக்சர்ஸ், அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாம தான் ரஜினி படத்தை விட்டாங்க. 

Jk rithish against petta production company sun pictures

அதேபோல, கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படத்த ரிலீஸ் பண்ணாங்க, இப்போ பொங்கல்க்கு ரஜினி படத்த ரிலீஸ் பண்ணாங்க ஆனா தில்லா களமிறங்கி அடிச்சாருல்ல அஜித் சார், அடுத்து தமிழ் புத்தாண்டு என எல்லா விடுமுறை நாட்களையும் சன் பிக்சர்ஸ் எடுத்துக்குறாங்க. படத்தை பார்க்க வேண்டும் என்று மக்களை அவங்க திணிக்குறாங்க என பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios