Asianet News TamilAsianet News Tamil

ஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...

அதைத் தொடர்ந்து அது ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விரைவில் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இசையமைப்பாளர் அனிருத்தை அங்கு குடியேற்றுவதற்காகவே பிரசாத் நிர்வாகத்தினர் அவருக்கு திட்டமிட்டே தொந்தரவு அளித்ததாக பகீர் தகவல்கள் வெளிவருகின்றன. 
 

ilayaraja not entering prsath studio
Author
Chennai, First Published Oct 16, 2019, 10:49 AM IST

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவை ஒரு இசைக்கோவிலாகவே மாற்றி பணியாற்றி வந்த இசைஞானி இளையாராஜா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த ஸ்டுடியோவுக்குள் காலடி எடுத்து வைப்பதையே நிறுத்தி விட்டார். இனி அங்கு அவரது இசைப்பணி தொடருவது சந்தேகமே என்கின்றனர் ஸ்டுடியோ வட்டாரத்தினர்.ilayaraja not entering prsath studio

தனது இசைப்பணிகளுக்கு இடையூறு செய்வதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது தனது மேலாளர் கஃபாரை வைத்து போலீஸில் புகார் செய்திருந்தார் இளையராஜா. அதைத் தொடர்ந்து அது ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விரைவில் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இசையமைப்பாளர் அனிருத்தை அங்கு குடியேற்றுவதற்காகவே பிரசாத் நிர்வாகத்தினர் அவருக்கு திட்டமிட்டே தொந்தரவு அளித்ததாக பகீர் தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்து அனிருத் தரப்பை தொடர்புகொண்டால் அவர்கள் பதில் தர மறுக்கின்றனர்.ilayaraja not entering prsath studio

20 வருடங்களாக தொடர்ந்து வரும் ராஜாவிடம் வாங்குவதை விட வருகிற புதியவரிடம் பல மடங்கு வாடகை வாங்க முடியும் என்கிற ஒரு அல்ப காரணத்துக்காகவே ராஜா வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோடிக்கணக்கான ராஜா ரசிகர்களின் சாபத்திலிருந்து பிரசாத் நிர்வாகம் தப்பவே முடியாது.

Follow Us:
Download App:
  • android
  • ios