Asianet News TamilAsianet News Tamil

’இளையராஜா 75’ விழாவில் தமிழ்த்தாய்க்கு நேர்ந்த அவமானம்...தெலுங்கர் என்பதால் விஷால் அலட்சியமா?...

"தேசிய கீதம் மாதிரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை, தனி வடிவம் உண்டு. அந்த வடிவம் , இசை நடையை மாற்றி பாட, இசை அமைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் சென்னையில் நேற்று நட ந்த இளையராஜா 75 இசை விழாவில், விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து புதிய நடையில் பாடப்பட்டது. ஒரு குழு மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்தை புதிய முறையில் பாடினார்கள்.

ilayaraja 75 news
Author
Chennai, First Published Feb 3, 2019, 10:18 AM IST

"தேசிய கீதம் மாதிரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை, தனி வடிவம் உண்டு. அந்த வடிவம் , இசை நடையை மாற்றி பாட, இசை அமைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் சென்னையில் நேற்று நட ந்த இளையராஜா 75 இசை விழாவில், விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து புதிய நடையில் பாடப்பட்டது. ஒரு குழு மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்தை புதிய முறையில் பாடினார்கள்.ilayaraja 75 news

இது வழக்கத்துக்கு முரணானது. சட்டப்படியும் தவறு. இந்த புது நடை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் , இளையராஜாவும் , தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும், பொருளாளர் எஸ் ஆர் பிரபுவும் எழுந்து நின்று வழக்கம் போல் மரியாதை செலுத்தினர்.
இது தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், அதை இயற்றிய மனோன்மணீயம் சுந்தரானாருக்கும், இசையமைத்த எம்.எஸ்.வி.க்கும், அதை சட்டமாக்கிய மறைந்த முதல்வர் கலைஞருக்கும் அவமானம் மட்டுமல்ல, 10 கோடி தமிழருக்கும் அவமரியாதை.ilayaraja 75 news

தமிழக கவர்னர் கல ந்து கொள்ளும் விழாவில் தமிழுக்கு அவமதிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசிய கீதத்தை அவமதித்தால் சட்டப்படி தண்டனை உண்டு. தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழ் சினிமாக்காரர்கள் அவமதிக்கலாமா..? அவர்களுக்கு தமிழ்த் தாய் வாழ்த்து நடை, இசை வடிவத்தை மாற்றும் உரிமையை யார் கொடுத்தது..?" என்று பலரும் கொந்தளிக்கிறார்கள்.

விஷயம் என்னவெனில், தமிழ்த்தாய் வாழ்த்தினை மேடையில் ஆண்கள், பெண்கள் அடங்கிய பாடகர், பாடகிகள் கோஷ்டியொன்று பாடத் துவங்கினார்கள். அது வழக்கமான பாடலாக இல்லாமல், "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்..." என்ற வரியை வேறு இசை மெட்டில் பாடியவுடன் "தத்தமித தத்தமித தத்தமித..." என்று இசை சந்தங்களைப் பாடினார்கள்.ilayaraja 75 news

இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்த அடுத்த வரியைப் பாடிவிட்டு, மீண்டும் வேறொரு இசை சந்தத்தைப் பாடினார்கள். இப்படியே தமிழ்த்தாய் வாழ்த்தின் 11 வரிகளுக்கிடையில் பல்வேறு இசை சந்தங்களைப் பாடித்தான் தமிழ்த்தாய் வாழ்த்தை முடித்தார்கள். சட்டப்படி இப்படி பாடுவது தவறு. இதை விழா அமைப்பாளர்களிடத்தில் யாரும் எடுத்துச் சொல்லவில்லை போலும்.

ஏற்கனவே நேற்றைய நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெலுங்கராக இல்லாமல் ஒரு தமிழராக இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? நோட் பண்ணிக்குங்க எதிரணி பிரதர்ஸ்...

Follow Us:
Download App:
  • android
  • ios