Asianet News TamilAsianet News Tamil

நவம்பர் மாதம் முதல், அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து – ஜிஎஸ்டி-க்கு எதிராக திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம்…

from November all shooting will cancel - demonstrated by Cinemas against GST ...
from November all shooting will cancel - demonstrated by Cinemas against GST ...
Author
First Published Oct 24, 2017, 9:27 AM IST


ஜிஎஸ்டி வரியால் ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டது என்று தமிழ், தெலுங்கு திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதை அடுத்து சினிமா டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் கேளிக்கை வர விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தால், 153 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட டிக்கெட் தற்போது 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஏற்கனவே திருட்டு இணையதள திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் சென்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்த டிக்கெட் கட்டண உயர்வு, மக்களை மேலும், திரையரங்குகளுக்கு வரவிடமால் செய்துள்ளது என்று திரையுலகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டது என்றும் அதற்கு எதரி்ப்பு தெரிவித்தும் தமிழ், தெலுங்கு திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் முதல், அனைத்து படப்பிடிப்புகளையும் மற்ற பணிகளையும் நிறுத்தப் போவதாக தெலுங்கு திரையுலகத்தினர் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். இதற்கு தமிழ் திரையுலகத்தினரும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது. விரைவில்  இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios