Asianet News TamilAsianet News Tamil

’அந்தப் பழைய தங்கர் பச்சான் படம் இல்லே இது’...’டக்கு முக்கு டிக்கு தாளம்’போடும் இயக்குநர்...

கடைசியாக இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’படத்துக்குப் பிறகு நீண்ட நெடிய ஓய்வு எடுத்து வந்த தங்கர்பச்சான் வேறு எந்த ஹீரோவும் கதை கேட்கக்கூட மறுத்ததால் தனது மகனையே ஹீரோவாக்கி அவருக்கு விஜித்குமார் என்று விசித்திரப்பெயர் சூட்டி, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’என்று அதையு விட விசித்திரமான தலைப்பில் ஒரு படம் இயக்கி முடித்திருக்கிறார்.
 

director thangar bachan interview
Author
Chennai, First Published Oct 18, 2019, 10:45 AM IST

விட்டால் அந்த பழைய தங்கர்பச்சான் நான் இல்லை. என்று தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்வார் போலிருக்கிறது. ‘இந்தப் படத்தை இயக்கியது முழுக்க முழுக்க வேறொரு தங்கர்பச்சான். கரம் மசாலா படம். மக்கள் ரசனை மாறியதால் என்னையும் மாற்றிக்கொண்டு விட்டேன்’ என்று தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் படம் குறித்து ஓவராக பில்ட் அப் கொடுக்கிறார் தங்கர்பச்சான்.director thangar bachan interview

கடைசியாக இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’படத்துக்குப் பிறகு நீண்ட நெடிய ஓய்வு எடுத்து வந்த தங்கர்பச்சான் வேறு எந்த ஹீரோவும் கதை கேட்கக்கூட மறுத்ததால் தனது மகனையே ஹீரோவாக்கி அவருக்கு விஜித்குமார் என்று விசித்திரப்பெயர் சூட்டி, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’என்று அதையு விட விசித்திரமான தலைப்பில் ஒரு படம் இயக்கி முடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு அவர் இயக்கியிருந்த படங்கள் தொடர்ந்து சொதப்பியதால் இப்படம் முற்றிலும் வேறு மாதிரி இருக்கும் என்று கூறும் தங்கர், “எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே அமைந்தது. எனது முதல் படம் மாதிரி நினைத்து  இதை இயக்கி இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி இந்த படத்தில் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில் போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ், கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கும். இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம் வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும் மாறுகிறது. எனவே நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்து விட்டேன். அதற்காகவே ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்று பெயர் வைத்துள்ளேன். director thangar bachan interview

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில் நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை கற்றுத்தருகிறது என்பது கதை. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக இருக்கும்.”என்கிறார். படம் பார்த்துட்டு பதில் சொல்றோம் பாஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios