Asianet News TamilAsianet News Tamil

அரசியலுக்கு வர இதுதாண்டா சான்ஸ்..! விஜய் ஒரு காந்தியவாதி -கொளுத்திப்போடும் சந்திரசேகர்..!

chandrasekar speaks about vijay
chandrasekar speaks about vijay
Author
First Published Oct 23, 2017, 5:05 PM IST


பல தடைகளை மீறி மெர்சல் படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா  வராதா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது.மெர்சல் என்ற பெயருக்கு  ஆரம்பித்த பிரச்னை, பின்னர் வழக்குகள் மூலமாக சுமூகமான தீர்வு ஏற்பட்டது.

பின்னர் படகாட்சியில் இடம் பெற்ற புறாவினால் வந்தது பிரச்னை...விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று கொடுத்தது.

பின்னர்,எப்படியோ திட்டமிட்டப்படி தீபாவளிக்கு திரைக்கு வந்தது மெர்சல்.

ஜிஎஸ்டி

மெர்சல் படத்தில் வரும் சில காட்சிகளில்,ஜிஎஸ்டி பற்றி விஜய் சில  டைலாக் பேசுவார். இதனை எதிர்த்து பா.ஜ,க எதிர்ப்பு தெரிவிக்க, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி ....சுமாரா ஓடின படத்தை......உலகமே  உற்று பார்க்கும் அளவிற்கு ப்ரீ ப்ரோமோஷன் கொடுத்தது  பா.ஜ.க.....

இந்நிலையில்,படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியது...ஆனால் பெயருக்கு ஏற்ப படம் மெர்சலாகவே  திரையில் ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படி ஜிஎஸ்டி காட்சிகளை வாபஸ்  பெறுவார்கள் தயாரிப்பு குழுவினர்? அதற்குள் மக்கள் அனைவருமே   மெர்சல் பார்த்து விடுவார்கள் என்றே சொல்லலாம்.....

மெர்சல் படம் மூலம் இதுவரை ரூ.150  கோடி வசூலாகி உள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது

சந்துல சிந்து  பாடும் எஸ்.ஏ. சந்திரசேகர்

ஹா ஹா....எதிர்பார்த்ததை விட படம் அமோகமாக வெற்றி பெற்று இருக்கு,....விஜய்க்கு ஆதரவும் பெருகி வருது ...ரசிகர்கள் பட்டாளம்  ஏராளமாக இருக்கே என சுதாரித்து கொண்ட சந்திர சேகர், “நடிகர் விஜய்  ஒரு காந்திய வாதி, அவர் தலைவராக உருவாகி தன்னை  நம்பியவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும்..”மெர்சல்” திரைப்படம் விஜய்யின் கோபத்தின் வெளிப்பாடே என தெரிவித்துள்ளார்.... அதாவது  சந்துல சிந்து பாடுகிறார் சந்திர சேகர்....

அரசியலில் ரஜினி குதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி,கமல்  வந்துட்டாருனு பேச்சு அளவில் சொல்ல வச்சி...கடைசியில் விஜய் வந்துடுவாரோ என்ற நிலை உருவாகி உள்ளது  

 

Follow Us:
Download App:
  • android
  • ios