Asianet News TamilAsianet News Tamil

தரலோக்கலா இறங்கி அடிக்க போறோம்... தளபதி மாஸ்னா என்னனு காட்ட போறோம் போட்றா வெடிய!! ட்விட்டரில் அலார்ட்டா இருக்கும் தளபதி ஃபேன்ஸ்

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், பகவதி படத்தில் வருவதைப்போல பக்கா மாஸாக இருக்கும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

bigil producer released new poster
Author
Chennai, First Published Oct 12, 2019, 1:17 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தங்களின் வழக்கமான ட்ரெண்டிங் ஹாஸ்டேக்குகளால் ஆக்கிரமித்தனர். அவர்கள் #BigilTrailerDay என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர். இந்த நிலையில் டிரைலர் 2 Minutes 30 Sec உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

bigil producer released new poster

இந்த சூழலில் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பிகில் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய போஸ்டரில் விஜய் இரண்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறார். இதில் பகவதி ஸ்டைலில் செம்ம மாஸாக உள்ளார். இந்த புதிய போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தரலோக்கலா இறங்கி அடிக்க போறோம், தளபதி மாஸ்னா என்னனு கெத்து காட்ட போறோம், போட்றா வெடிய இன்று மாலை - 6மணிக்கு ட்ரெண்டாக்கப்போறோம் எல்லோரும் கொஞ்சம் அடங்கி இருங்க இல்லனா மீறி வந்தா காணாம போயிடுவீங்க என ட்விட்டரை ட்ரெண்டாக்க உள்ளதால் எச்சரித்துள்ளனர்.

bigil producer released new poster

படத்தின் போஸ்டர் வெளியீடு, இசை வெளியீடு என ஒவ்வொரு அப்டேட்களையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் என்னும் பாடலும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.இதனால் ஒவ்வொரு நாளும் விஜய் ரசிகர்கள் ‘பிகில்’ குறித்து செய்திகளைப் பரப்பிவந்தனர். மேலும் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து அப்டேட் வேண்டுமென்று படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்கு ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கையும் வைத்தனர். அதைத்தொடர்ந்து இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios