Asianet News TamilAsianet News Tamil

2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...

பிகில் படத்தின் சென்சாரின்போது உணர்ச்சி வசப்பட்டு சென்சார் போர்டுக்கு நன்றி என்ற வாசகத்தை நீக்கச்சொன்ன அதிகாரிகள்., ஒரு ரத்தக்களறி காட்சிகளையும் நான்கு வார்த்தைகளையும் மியூட் செய்யச்சொல்லி ‘யு/ஏ சர்டிபிகேட் வழங்கி விட்டார்கள். ஆனால் சர்டிபிகேட் கைக்கு வந்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தயாரிப்பாளர் தரப்பு அதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

bigil movie censor issue
Author
Chennai, First Published Oct 16, 2019, 4:01 PM IST

மூன்று மணி நேரங்களுக்கு ஒரு நிமிடம் குறைவாக ஓடும் ‘பிகில்’படத்தின் சென்சார் சர்டிபிகேட் வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுக்கும் நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பக்கத்தில் இதுவரை சென்சார் சர்டிபிகேட்டை பதிவிடவில்லை. அதாவது பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை.bigil movie censor issue

பிகில் படத்தின் சென்சாரின்போது உணர்ச்சி வசப்பட்டு சென்சார் போர்டுக்கு நன்றி என்ற வாசகத்தை நீக்கச்சொன்ன அதிகாரிகள்., ஒரு ரத்தக்களறி காட்சிகளையும் நான்கு வார்த்தைகளையும் மியூட் செய்யச்சொல்லி ‘யு/ஏ சர்டிபிகேட் வழங்கி விட்டார்கள். ஆனால் சர்டிபிகேட் கைக்கு வந்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தயாரிப்பாளர் தரப்பு அதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.bigil movie censor issue

படம் சென்சாருக்குச் செல்லுமுன்னர் மூன்று மணி நேர நீளம் என்பது மிக அதிகம் என்று தயாரிப்பாளர் தரப்பு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் இந்தியாவின் கிறிஸ்டோபர் நோலனான அட்லி ‘ஒரு நிமிடம் கூட வெட்டமுடியாது’என்று அடம்பிடித்துவிட்டாராம். இப்போது அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்காக அரசியல்வாதிகளின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பு தரப்பு வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் 7 காட்சிகள் படத்தை ஓட்ட நினைத்த நிலையில் இந்த மூன்று மணி நேர நீளம் என்பதே அவர்களது எண்ணத்துக்கு எதிரியாகிவிட்டதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios