Asianet News TamilAsianet News Tamil

தெலுங்கு பக்கம் போய் வசூல் அல்ல நினைத்த பேட்ட... அஜித் மாதிரியே அங்கேயும் ஆப்போடு காத்திருக்கும் சிரஞ்சீவி மகன்!!

பேட்டைக்கு பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' படங்கள் வரிசை கட்டி காத்துக்கொண்டிருப்பதால் செம்ம அப்செட்டில் உள்ளதாம் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம்.

Advantage Vinaya Vidheya Rama? Petta Drops Out Of Sankranthi Race
Author
Hyderabad, First Published Jan 5, 2019, 7:45 PM IST

தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிசில் பெரும் ஓபனிங் உள்ள இரண்டு ஹீரோக்கள் அன்று நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். தமிழகத்தில் பேட்டைக்கு வில்லனாக அஜித்தின் விஸ்வாசம் உள்ளதைப்போல தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் பேட்டைக்கு பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' படங்கள் வரிசை கட்டி காத்துக்கொண்டிருப்பதால் செம்ம அப்செட்டில் உள்ளதாம் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம்.

ரஜினிகாந்த் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் ஆந்திராவில் தமிழகத்துக்கு இணையாக வசூல் குவிப்பது கடந்த பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான '2.0' படம் தமிழகத்தை காட்டிலும் தெலுங்கில் தான் அதிக வசூலைப் பெற்றது. பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தை ஆந்திராவில் திரையிட்டு அதிக வசூலைப் பெறலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.

Advantage Vinaya Vidheya Rama? Petta Drops Out Of Sankranthi Race

தெலுங்கு முன்னணி நடிகர்களின் நேரடித் தெலுங்குப் படங்கள் பொங்கலையொட்டி ஆந்திராவில்வெளியாவதால் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' உள்ளிட்ட படங்கள் பொங்கல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே தெலுங்கு படங்களைத் திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை கொடுப்பதால் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவது குறைவாகவே உள்ளது.

Advantage Vinaya Vidheya Rama? Petta Drops Out Of Sankranthi Race

நேரடித் தெலுங்குப் படங்களுடன் பேட்ட போட்டி போட்டு வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் பேட்ட படத்தின் தெலுங்கு உரிமை வெறும் 15 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. இது 2.0 படத்தை விட ஐந்து மடங்கு விலை குறைவு என்பதால் அந்தத் தொகைக்கு மேலாகப் படம் வசூலித்து விடும் என்ற நம்பிக்கையில் தெலுங்கு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் கிடைக்கும் திரையரங்குகளில் பேட்ட படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு படங்களையுமே தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் விரும்பி வருகின்றனர். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் ஓனர்கள் 'விஸ்வாசம்' படத்தை வெளியிடவே விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios