Asianet News TamilAsianet News Tamil

கொள்ளையன் முருகனால் பீதி... பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு ஓடும் நடிகைகள்..!

கொள்ளையன் முருகனை நகைக்கடை அதிபர் என நம்பி நெருங்கி பழகியவர்களின் பட்டியலை காவல்துறையினர் தயாரித்து வருவதால் நடிகைகள் பீதியில் உள்ளனர். 

Actresses running for AIDS hospitals
Author
Tamil Nadu, First Published Oct 17, 2019, 6:33 PM IST

திருச்சி, லலிதா ஜூவல்லரி சுவரில் துளை போட்டு கொள்ளையடித்த சம்பவத்தில் கொள்ளையன் முருகனை பற்றி அதிர வைக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. 

முருகன் மீது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன. பெங்களூரில் மட்டும்  பல்வேறு இடங்களை குறி வைத்து முருகன் கொள்ளையடித்துள்ளான். மாநிலத்துக்கு ஒரு வீடு என நான்கு மாநிலங்களில் முருகன் வீடு வைத்துள்ளான். இதையடுத்து பெங்களூரு போலீசார் முருகனை காவலில் எடுத்தனர். அப்போது திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன் புதைத்து வைத்திந்த 12 கிலோ, திருச்சி ஜூவல்லரி நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டு சென்றனர். இவர்களை வழி மடக்கிய திருச்சி போலீசார், லலிதா ஜூவல்லரி நகைகளை பெங்களூரு போலீசிடம் இருந்து மீட்டனர்.Actresses running for AIDS hospitals

பெங்களூரு போலீசாரின் பிடியில் இருக்கும் முருகன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டபோது, 2 மணி நேரத்துக்கு மேல் அவனிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பற்றியும் பல்வேறு தகவல்களை கூறியுள்ளான். அதன்படி,  2017-ம் ஆண்டில் அண்ணாநகர் பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் தனது கூட்டாளிகள் அனைவரும் பிடிபட்டபோதுதான், முருகன் குறிப்பிட்ட ஒரு அதிகாரியிடம் போனில் பேரம் பேசி இந்த பணத்தை கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்களை கூறி உள்ளான்.

Actresses running for AIDS hospitals

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கொள்ளையன் முருகன், எல்லோரும் என்னை விட்டு விட்டார்கள். நீங்கள் மட்டும் எனக்கு தொடர்ந்து தொல்லை தருகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளான். இதற்கு போலீஸ் அதிகாரியும் சரி என்று தலையாட்டியுள்ளார்.

இதையடுத்து சமயபுரம் பஞ்சாப்நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த ரூ.5 கோடி நகை, ரூ.19 லட்சத்தில் முருகன் போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளான். இதன் பிறகும் போலீஸ் அதிகாரி தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மேலும் ரூ.20 லட்சத்தை ஒரு ஓட்டலின் முன்பு காரில் வைத்து கொடுத்ததாகவும் முருகன் கூறியுள்ளான். அங்கிருக்கும் கேமிராவில் அது பதிவாகி இருப்பதாகவும் முருகன் தெரிவித்துள்ளான். முருகனின்  குற்றச்சாட்டு உண்மைதானா? என்பது பற்றி உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆந்திராவில் எல்.ராஜம்மாள் பிலிம்ஸ் என்ற பெயரில் மனசவினவ, ஆத்மா என்ற 2 படங்களை தனது அக்கா மகன் சுரேசை ஹீரோவாக்கி முருகன் படம் எடுத்தான். அப்போது நடிகைகளிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளான். பிரபல வாரிசு நடிகையின் மீது இருந்த மோகத்தால் ரூ.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளான். அத்துடன் தன்படத்தில் நடித்த நடிகைகள், துணை நடிகைகளுக்கு கொள்ளையடித்த நகைகளில் முத்து, வைரம் பதிக்கப்பட்ட நகைகளாக அள்ளி வழங்கியுள்ளான். சில துணை நடிகைகளுடன் குடித்தனமும் நடத்தியது தெரிய வந்துள்ளது.

 

முருகன், சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கொள்ளையர்கள் என்று தெரியாமல், நகைக்கடை அதிபர் என்று நம்பி நகையை பரிசாக பெற்று அவர்களிடம் பழகிய நடிகைகளின் லிஸ்டை ஜ்காவல்துறையினர் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் கொடுத்த நகைகளை பரிசாக பெற்றது பற்றி விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதனால் கொள்ளையர்கள் என்று தெரியாமல் முருகன், சுரேஷிடம் பழகிய தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் தற்போது பதட்டத்தில் உள்ளனர்.  விசாரணையில் அந்த நடிகை, இந்த நடிகை என மாறி மாறி சொல்வதால் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த நடிகைகள் என தீவிரமாக விசாரிப்பதுடன், சம்பந்தப்பட்ட நடிகைகளிடமும் நகைகளை பெற்றீர்களா என்று விசாரிக்கும்போது அவன் சொன்னது உண்மையா என்று தெரியவரும் என தனிப்படை போலீஸ்காரர்கள் தெரிவிக்கின்றனர். Actresses running for AIDS hospitals

போலீஸாரிடம் பிடிபட்ட பிறகு முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை நெருங்கிப்பழகும் நடிகைகளிடம் முருகன் மறைத்து அவர்களுடன் நெருக்கத்தில் இருந்துள்ளான். போலீஸ் பிடியில் முருகன் சிக்கி, அவனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ள அவனுடன் நெருக்கத்தில் இருந்த நடிகைகள், தங்களுக்கும் முருகனிடம் இருந்து செக்ஸ் நோய் பரவி இருக்குமோ என பதறியடித்து மருத்துவமனைக்கு சென்று எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios