Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ் நடிகைன்னு சொன்னா நம்பவா போறீங்க?

தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார்.

actress priyanka chopra wants to become pm
Author
Mumbai, First Published Jun 5, 2019, 10:12 AM IST

தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார்.actress priyanka chopra wants to become pm

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்கா டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.actress priyanka chopra wants to become pm

‘நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது உடனே அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எனவே அடுத்த சில ஆண்டுகளில் இருவருமே அரசியலில் குதித்து இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் பதவிகளில் அமர்வோம்’என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியை டைம்ஸ் இதழ் நகைச்சுவைப் பகுதியில் வெளியிடாததால் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios