Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ். மகன் மத்திய அமைச்சரான செய்தியை கன்ஃபர்ம் பண்ணும் நடிகை கஸ்தூரி...

தேனி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு அதிமுக வேட்பாளரும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி எஸ்சின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக ஆனதாக பிரிண்ட் செய்ய்ப்பட்ட போலியான அழைப்பிதழ் ஒன்றை ரீ ட்விட் செய்து அரசியல் வட்டாரங்களில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

actress kasthuri retweets a contravercial invitation
Author
Chennai, First Published May 28, 2019, 11:56 AM IST

தேனி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு அதிமுக வேட்பாளரும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி எஸ்சின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக ஆனதாக பிரிண்ட் செய்ய்ப்பட்ட போலியான அழைப்பிதழ் ஒன்றை ரீ ட்விட் செய்து அரசியல் வட்டாரங்களில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.actress kasthuri retweets a contravercial invitation

சமூகம்,கலை, அரசியல் என்று சகல சப்ஜெக்டுகளிலும் ட்விட்டரில் கதகளி ஆடிக்கொண்டிருப்பவர் கஸ்தூரி. சினிமா வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்து அவர் மெல்ல காம்பியரர் ஆக மாறிவரும் நிலையில் அக்காவின் முக்கிய பொழுதுபோக்கு மைய்யமாக ட்விட்டர் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சில நிமிடங்கள் முன்னதாக தனது சொந்தச் சரக்காக இல்லாத மற்றவரின் ட்விட் ஒன்றை ரீ ட்விட் செய்துள்ளார் கஸ்தூரி. ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என்று அப்பட்டமாகத் தெரியும் அந்த அழைப்பிதழில் ஓ.பி. ரவீந்திரநாத் என்கிற பெயர் வருமிடத்தில் எம்.பி, மற்றும் மத்திய அமைச்சர் என்று வருகிறது.

ஓ.பி.எஸ். மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்று பாரத தேசமெங்கும் பலமான பட்டிமன்றம் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே கல்வெட்டில் எம்.பி என்று பெயர் பொறித்த காண்ட்ரவர்சி போலவே இன்னொன்று. அப்ப இதுவும் பலிச்சிடுமோ? எதுக்கும் சொல்லி வைப்போம் மத்திய அமைச்சர் ஓ.பி.எஸ்.ஆர் வாழ்க...

Follow Us:
Download App:
  • android
  • ios