Asianet News TamilAsianet News Tamil

'கிழக்கே போகும் ரயில்' ஹீரோ சுதாகருக்கு இந்த நிலையா? மருத்துவ மனையில் சிகிச்சை!

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சுதாகர்.  தெலுங்கு திரையுலகில் வெற்றிகளை குவித்து வந்த இவருக்கு முதல் தமிழ் படமே, மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
 

actor sudhakar admitted hospital
Author
Chennai, First Published Oct 5, 2019, 2:01 PM IST

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சுதாகர்.  தெலுங்கு திரையுலகில் வெற்றிகளை குவித்து வந்த இவருக்கு முதல் தமிழ் படமே, மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

actor sudhakar admitted hospital

இந்த படத்தை தொடர்ந்து, 'மாந்தோப்புக்கிளியே',  'பொண்ணு ஊருக்கு புதுசு',  'கரை கடந்த ஒருத்தி',  'நிறம் மாறாத பூக்கள்' என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து, தமிழ் பட கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டார். இவரின் சுருட்டை முடி. கலையான முகம். கள்ளம் இல்லா சிரிப்புக்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் இருந்தனர்.  எங்கு சென்றாலும் ரசிகர்களின் வரவேற்பு ஆரவாரம், இவரை சூழ்ந்தது.   

இதனை சரியாக தக்கவைத்துக்கொள்ள தெரியாத நடிகர் சுதாகர் படப்பிடிப்பிற்கு குடித்து விட்டு வரும் அளவிற்கு திசைமாறி போனார். தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குறைந்தன. அதேபோல், தமிழிலும் இவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. ஒரு நிலையில் தமிழ் ரசிகர்களே இவரை மறந்து போனார்கள்.

actor sudhakar admitted hospital

கடைசியாக இவர் நடிப்பில், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் சரியாக ஓடாததால் ஓரங்கட்டப்பட்ட இவர், பணத்திற்காக காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பின் முழு நேர காமெடி நடிகராக மாறிவிட்டார்.

actor sudhakar admitted hospital

சூப்பர் ஸ்டார் ஆக இருக்க வேண்டிய இவர், இப்படி காமெடி நடிகராக தள்ளப்பட்டதற்கு இவரே தான் காரணம் என பல பிரபலங்களும் கூறுவார்கள். தற்போது 60 வயதாகும் இவர், சமீப காலமாக உடல் நல பிரச்சனை காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios