Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கூத்தாடிகள் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை...பாலகன் சுர்ஜித்துக்காக கொந்தளித்த நடிகர் ராஜ்கிரண்...

நடிகர் விவேக்,இயக்குநர் சேரன் ஆகியோரைத் தொடர்ந்து சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ராஜ்கிரண்,...சில வருடங்களுக்கு முன்பு
"அறம்" என்று ஒரு திரைப்படம் வந்தது...ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து விடும், குழந்தைகள் பற்றிய, "விழிப்புணர்வு" ஏற்படுத்துவதற்கான, சினிமா கூத்தாடிகளின் சமூக அக்கறை அது...ஆனால், அரசியல் கூத்தாடிகள் அதிலிருந்து எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை...

actor rajkiran condems politicians
Author
Chennai, First Published Oct 26, 2019, 4:18 PM IST

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் பச்சிளம் பாலகன் சுர்ஜித்தின் மீட்பு தொடர்ந்து தாமதமாகிக் கொண்டுவரும் நிலையில்,...நேற்று மாலை 5 மணிக்கு தெரிய வந்த சம்பவத்துக்கு, இன்று காலை தான், "பேரிடர் மீட்புக்குழு" வருகிறதென்றால்,இதை எப்படி எடுத்துக்கொள்வது...? என்று பிரபல நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார்.actor rajkiran condems politicians

பாலகன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்படவேண்டும் என்ற பிரார்த்தனைகள் நேற்று இரவிலிருந்தே நீடித்து வரும் நிலையில் தமிழக திரையுலக நட்சத்திரங்களும் தங்கள் தங்கள் சோகங்களை, வருத்தங்களை ஆதங்கங்களை தங்கள் வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விவேக்,இயக்குநர் சேரன் ஆகியோரைத் தொடர்ந்து சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ராஜ்கிரண்,...சில வருடங்களுக்கு முன்பு
"அறம்" என்று ஒரு திரைப்படம் வந்தது...ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து விடும், குழந்தைகள் பற்றிய, "விழிப்புணர்வு" ஏற்படுத்துவதற்கான, சினிமா கூத்தாடிகளின் சமூக அக்கறை அது...ஆனால், அரசியல் கூத்தாடிகள் அதிலிருந்து எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை...

அரசாங்கமே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்கிற, சோம்பேறித்தனம் மக்களிடம் பெருகிவிட்டது..."தோண்டிய ஆழ்துளைக்கிணற்றை
மூடாமல் விட்டால், அது ஆபத்தானதே, அதை மூடி விட வேண்டுமே" என்ற தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது...நாம் எப்போது திருந்தப்போகிறோம்
என்பது தெரியவில்லை...actor rajkiran condems politicians

இப்போது, அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், ஸ்தலத்தில் நின்று, குழந்தையை மீட்க போராடுவது, கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. இருந்தாலும், குழந்தையை கண்ணால் கண்டால் தானே, பெற்ற தாய்க்கும், எனக்கும், தமிழக மக்களுக்கும், நெஞ்சு படபடப்பு அடங்கி நிம்மதி வரும்...எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்து விட்ட நம் நாட்டில், இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக, ஒரு நல்ல தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க முடியாதா...நேற்று மாலை 5 மணிக்கு தெரிய வந்த சம்பவத்துக்கு, இன்று காலை தான்,"பேரிடர் மீட்புக்குழு" வருகிறதென்றால், இதை எப்படி எடுத்துக்கொள்வது...?

இறைவா, நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருக்கிறோம்... வழி தெரியாமல் தவிக்கிறோம்... அழுது அழுது உன்னிடமே மன்றாடுகிறோம்...
எங்கள் குழந்தையை எப்படியாவது மீட்டுக்கொடுத்து, எங்கள் இதயங்களின் படபடப்பை போக்கு...என்று மிக உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார் ராஜ்கிரண்.

Follow Us:
Download App:
  • android
  • ios