Asianet News TamilAsianet News Tamil

விஜய்... கவுண்டமணி... செந்தில்... விவேக்கின் கட்சிகள் வரவேற்கப்படுகின்றன..!

நடிகர்கள் விஜய், கவுண்டமணி, செந்தில், விவேக் என யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைத்தான் சொல்ல வேண்டும். அதைவிட்டுட்டு தங்களின் படத்தை ஓட வைப்பதற்காக வீணாக அ.தி.மு.க.வை தாக்கக்கூடாது. - ஜெயக்குமார் (தமிழக அமைச்சர்)

A warm welcome to Vijya, Kavundamani, Senthil & Vivek's political party
Author
Tamil Nadu, First Published Sep 25, 2019, 4:42 PM IST

* பத்து வருடங்களாக அசைவத்தை மறந்துவிட்டேன். கோதுமை, அரிசி ஆகியவற்றை தொடுவதே இல்லை. காய்கறிகளும், பழங்களும்தா உணவு. பருப்பு கூட ரசமாகத்தான் சாப்பிடுகிறேன். இதனால் இருபது கிலோ வரை எடை குறைந்துவிட்டேன்.- மம்தா பானர்ஜி (மே.வ. முதல்வர்)

* பா.ஜ.க.வின் சரித்திரத்தில் ‘சாத்தியமாகாது’ எனும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை நாங்கள் சாதித்திருக்கிறோம். அ.தி.மு.க.வோடு எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. அதே நேரம் அவர்களோடு உள்ள நட்புக்கு பங்கம் வராமல் எங்களின் கட்சியை வளர்க்கும் பணியில் உள்ளோம். -நாராயணன் திருப்பதி (பா.ஜ. செய்தி தொடர்பாளர்)

* நான் கடந்த வருடம் அமெரிக்கா சென்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலமாக இன்று தமிழக ஏழை எளிய பதினைந்து மாணவர்கள் அமெரிக்கா சென்று கால்நடை பல்கலையில் படிக்கிறார்கள்.- உடுமலை ராதாகிருஷ்ணன் (தமிழக அமைச்சர்)

* சகோதரி எனும் முறையில் சசிகலாவை எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. என்களின் ’அண்ணா திராவிடர் கழகம்’ கட்சியானது புதிய கட்சி. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள எங்கள் தொண்டர்களுக்கு அறிவுரை கூறவே கூட்டங்களை நடத்துகிறோம். -    திவாகரன் (அ.தி.க. தலைவர்)

* கருணாநிதியின் பேரன், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகன் என்கிற அடைமொழிகள் போதும். வேறு எந்தப் பட்டமும் எனக்கு நீங்கள் அளிக்க வேண்டாம். - உதயநிதி (தி.மு.க. இளைஞரணி செயலாளர்)

* ரசிகர்கள் இன்று ஒரு படத்தை ரசிக்காமல் அதை தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முன்னனி நடிகர்கள், இயக்குநர்களின் முயற்சிகளைப் பாராட்டாமல்  சில விமர்சகர்கள் தங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டவே நினைக்கின்றனர். -விக்னேஷ் சிவன் (நயன் தாராவின் காதலர்)

* நடிகர்கள் விஜய், கவுண்டமணி, செந்தில், விவேக் என யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைத்தான் சொல்ல வேண்டும். அதைவிட்டுட்டு தங்களின் படத்தை ஓட வைப்பதற்காக வீணாக அ.தி.மு.க.வை தாக்கக்கூடாது. - ஜெயக்குமார் (தமிழக அமைச்சர்)

* இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் ஜாதியின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இனவாதம் போல சாதயவாதமும் வன்கொடுமை என ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும். -திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)

* தமிழிசையை கவர்னராக்கியதற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை, அதன் மூலம் தூண்டில் போட்டு தமிழகத்தின் தென்கோடியிலாவது காவியை பூச முடியுமா என்ற நப்பாசையே காரணம். எனினும் தமிழ் பெண் கவர்னராக ஆகியுள்ளதால் வரவேற்போம்.- கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

Follow Us:
Download App:
  • android
  • ios