Asianet News TamilAsianet News Tamil

இன்னும் ஒரே நாள் தான்... பணத்தால் நிறையப்போகும் உங்கள் பாக்கெட்..!

பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

Your pocket with lots of money
Author
Tamil Nadu, First Published Jan 5, 2019, 4:50 PM IST

பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.  

பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலாக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க 258 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது. Your pocket with lots of money

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதைப்போல, பொங்கல் தொகுப்போடு, ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசுத் தொகை வழங்க வகை செய்வதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. வருகிற திங்கட்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இன்று மாலை நடைபெற்ற விழாவில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை, 10 பேருக்கு வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்காக 1980 கோடி ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios