Asianet News TamilAsianet News Tamil

சுகமாக பயணம் செய்யலாம்...! இனிமையாக பயணம் செய்யலாம்...!! உங்கள் ரேப்பிடோ பைக் டாக்ஸியில்..!

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் ரேப்பிடோ பைக் டாக்ஸி சிஸ்டம் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் லோக்கல் பயணங்களை சிறப்பாகவும், ஈஸியாகவும் அமைத்துக் கொள்ள இந்த ரேப்பிடோ பைக் டாக்ஸி உதவுகிறது. இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் அன்பான சேவையையும் பெற முடிகிறது.

rapido bike taxi
Author
Tamil Nadu, First Published Oct 9, 2019, 10:26 AM IST

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர். பொது வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காண்பிக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் மற்ற சராசரி நபர்களை போன்று வேலை வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கப் பெறாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது இதன் காரணமாக 90 சதவீத மாற்றுத்திறனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்பதே உண்மை. 

மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் இவர்களுள் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் செய்து இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்திக்கொள்ள விருப்பப்படுகிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது என கருதப்படுகிறது. குறிப்பாக கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த வாய்ப்புகளுக்கு இவர்களின் உடல் குறைபாடு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

rapido bike taxi

இந்த செயலி மூலம் இளைஞர்களுக்கு ரேப்பிடோ நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறுகையில் , எங்களிடம் பகுதி நேர மற்றும் முழு நேரம் வேலை செய்யும் வகையில் அனைத்து வகையான கேப்டன்கள் உள்ளனர். மிகவும் போட்டி நிறைந்த இந்த சூழலில் ஊனமுற்றோர்கள் ஒரு வேலையை பெறுவதற்கு மிகவும் சிரமப் படுகின்றனர். இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் அத்தகையவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதே அவர்களுக்கு தேவையானது ஒரு வாய்ப்பு. 

rapido bike taxi

அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 1000 ஊனமுற்றோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதே எங்களுடைய குறிக்கோள். இந்த லட்சிய இலக்கை அடைய, நாங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம். வாகனம் இல்லாத மாற்றுதிறனாளிகள் எங்களுடன் பணியாற்ற ஆர்வத்துடன் இருந்தால் அவர்களுக்கு வாகனம் வாங்க நிதி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம், எங்கள் இந்த திட்டத்திற்கு தமிழக நடவடிக்கை தலைவர் திருகோபிதாஸ் தலைமை தாங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.

rapido bike taxi

இந்தியாவின் மிகப்பெரிய பைக் டாக்ஸி சேவையான ரேப்பிடோ இப்போது இந்தியாவின் 80 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் மக்கள் குறைவான செலவில் பயணம் செய்யவும் மற்றும் குறைந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டும் என்பதே!போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரேப்பிடோ பைக் டாக்ஸி ஒரு சிறந்த தீர்வாகும்தற்போது, தமிழ்நாட்டில் 5 நகரங்களில் சேவைகள் செயல்பட்டு வருகின்றன.

rapido bike taxi

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் இந்த நகரங்களில் 100000 கேப்டன்களையும் 1000000 வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு மொபைலில் பிளே ஸ்டோரிலும் மற்றும் ஐ போனில் ஆப் ஸ்டோரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் எந்த நேரத்திலும் குறைந்த செலவில் உங்கள் சவாரிகளை முன்பதிவு செய்ய உதவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios