Asianet News TamilAsianet News Tamil

வீணாய் போன நானோ கார்... பணாலான ரத்தன் டாடாவின் கனவு திட்டம்..!

2019-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாடா நிறுவனத்தின் சார்பில் ஒரு நானோ கார்கூட தயாரிக்கப்படவில்லை. இதுவரை இந்தியா முழுவதும் ஒரே நானோ கார் தான் விற்பனையாகியுள்ளது. 

No Tata Nano production...ratan tata shock
Author
Mumbai, First Published Oct 8, 2019, 5:44 PM IST

2019-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாடா நிறுவனத்தின் சார்பில் ஒரு நானோ கார்கூட தயாரிக்கப்படவில்லை. இதுவரை இந்தியா முழுவதும் ஒரே நானோ கார் தான் விற்பனையாகியுள்ளது.  

ரத்தன் டாட்டாவின் கனவு திட்டம் நானோ கார். கடந்த 2008-ம் ஆண்டு ஆட்டோமொபைல் எக்ஸோபில் அனைவரின் கவனத்தையும் டாடா நானோ கார் ஈர்த்தது. ஒரு லட்சத்துக்கு கார் விற்பனை செய்யப்படும் என்ற ரத்தன் டாட்டாவின் அறிவிப்பு பரபரப்பை அதிகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் எப்போது கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நானா காரின் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்கள், அடுத்தடுத்து வந்த புகார்கள், இன்ஜின்களில் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் நானா கார் விற்பனை சரியத் தொடங்கியது.

No Tata Nano production...ratan tata shock

இதனால் ஆண்டுக்கு ஆண்டு அதன் விற்பனை சரிந்துகொண்டே சென்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரை ஒரு நானோ மாடல் கார்கூட தயாரிக்கப்படவில்லை. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நானோ காரில் ஒரு கார் மட்டும் பிப்ரவரி மாதம் விற்பனையானது. மற்ற மாதங்களில் ஒன்றுகூட விற்கவில்லை என டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No Tata Nano production...ratan tata shock

நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது என்று டாடா நிறுவனத்தால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை, என்றாலும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நானோ கார் உற்பத்தி ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios