Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் நீங்கள் செய்யலன்னா.... ஜனவரி 1-ம் தேதி உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

கே.ஒய்.சி. எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை வரும் 2020 ஜனவரி, 1-ம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமோ, பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. 

KYC before January 1 otherwise banks may freeze your account... Reserve Bank
Author
Mumbai, First Published Oct 13, 2019, 5:52 PM IST

கே.ஒய்.சி. எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை வரும் 2020 ஜனவரி, 1-ம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமோ, பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. 

வாடிக்கையாளர்கள், வங்கிகளில் கணக்கு துவங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள, கே.ஒய்.சி., எனப்படும், சுய விபரக் குறிப்புகள் கொண்ட படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறை, பின்பற்றப்படுகிறது. இதன்படி, வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி மற்றும் 'மொபைல்' எண், 'இ - மெயில்' முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை, வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

KYC before January 1 otherwise banks may freeze your account... Reserve Bank

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கே.ஒய்.சி. ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் கே.ஒய்.சி. படிவத்தை புதுப்பிக்காவிட்டால் வங்கிக் கணக்கும் முடக்கப்படும் என்றும் அந்த வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

KYC before January 1 otherwise banks may freeze your account... Reserve Bank

இந்த கே.ஒய்.சி. ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், தீவிரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios