Asianet News TamilAsianet News Tamil

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு நிச்சயம் உதவும்...

methods for getting high yields in groundnut
methods for getting high yields in groundnut
Author
First Published Dec 16, 2017, 12:39 PM IST


 

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற உதவும் தொழில்நுட்பம் 

** விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் (கடலை) 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். 

** விதைப்புக்கு முன், ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண்சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பயிருக்கு தேவையான பேரூட்டச் சத்துக்களுடன், நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம். 

** ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும், அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும். 

** மேலுரமாக இடும்போது, வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும். இதனால் மண் பொலபொலவென இருப்பதால், விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும். 

** காய்கள் முற்றி, தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும், எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.

** பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்க, பயிர் பூக்கும் தருணத்தில் 75 நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும். 

** இரண்டு கிலோ டி.ஏ.பி. உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து, மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து, அதிகமான மகசூல் பெறலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios